நம் எல்லாருக்கும் ரயில் பயணம் என்பது ஒரு சந்தோசம் தர கூடிய அனுபவம் ஆனால்அதில் வழங்கபடும் உணவு சுகாதாரமானதாக உள்ளதாஎன்பது பெரும்பாலு நாம் அறிவதில்லை ரயில்வேயில் உணவு சுகாதாரமற்ற முறையில் தயரிக்க படுவதாக இன்றய தினமணியில் ஒரு செய்தி வந்து உள்ளது
மேலும் இந்த சமையல் அறை பெட்டிகளில் சைவ உணவுகள் மட்டுமன்றி, பிரட் ஆம்லெட் உள்ளிட்ட அசைவ உணவு வகைகளும் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு, ஒன்றாகவே எடுத்துச் செல்லப்பட்டு, பயணிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன என்றும்பெரும்பாலும்இந்த உணவுகளை பயணிகளுக்கு விநியோகிக்கும் ஊழியர்களுக்கு சீருடைகள் மற்றும் தொப்பிகளை ஐஆர்சிடிசி வழங்கியுள்ளது.
ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் அசுத்தமான, அழுக்கடைந்த சீருடைகளுடன் உணவுகளை விநியோகிக்கின்றனர்என்பதும் இதனால், பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ,சமையல் அறை பெட்டிகளில்எலி, கரப்பான் பூச்சி போன்றவை சுதந்திரமாக உலா வருவது என்பதும் ரயில் பெட்டிகளை நவீன மயமாக்கும் திட்டத்துக்காக ரயில்வே துறை ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது,
ஆனால் சமையல் அறை பெட்டிகளில் பெரும்பாலானவை 20முதல் 30 ஆண்டுகள் வரை பழமையானவையாக உள்ளதாகவும் . சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், கரண்டிகள் உள்ளிட்ட உபகரணங்களும் தொல்பொருள்களை நினைவூட்டுபவையாக உள்ளன என்பதும் வேதனை அளிக்க கூடியதாக செய்தியாக வந்து உள்ளது இந்த விசயங்களில் ரயில்வே நிர்வாகம் நடவடிகை எடுத்து பயணிகளின் உடல் நலத்திற்கு உத்திரவாதம் அளிக்குமா?
|
No comments:
Post a Comment