Friday, December 16, 2011

வெளி நாட்டில் இருந்து கொண்டே வாக்காளர் அடையாள அட்டையில் நமது பெயர், முகவரி விவரம் சரி பார்க்கலாம்

இந்த பதிவில் வரும் விவரங்கள் அனைத்தும் எனக்கு சகோதரர் ஒருவரின் E-MAIL ( Hkzubair Haja, Jahir Hussain ) மூலம் வந்தவை இதனால் பயன்அடைப்பவர்கள் நன்றியை நண்பருக்கு கூறுங்கள் இதை மீள் பதிவு செய்ததுமட்டும் எனது பணி.


நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலைசெய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில்இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில்உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதிலசோதித்துக்கொள்ளலாம்.துபாயில் வேலை செய்யும் ஒருவருக்குசைதாப்பேட்டையில் ஒட்டு இருக்கும். மகன்கள் இருக்கின்றார்கள். அவர்கள்அவ்வளவு பொறுப்பாக சென்று நமது பெயர் விவரங்களை சரிபார்ப்பர்காளஎன்றால் இல்லை. நமது பெயர்பார்க்கும் வேலையைஅரசு வெளியிட்டுள்ளதேர்தல் அட்டவணை விவரத்தில் உள்ள விவரங்கள் சரிபார்க்க நாம்சைதாப்பேட்டை வரவேண்டியதில்லை. துபாயில் இருந்தே விவரங்களைசரிபார்க்கலாம். இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிகசெய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள்.அடுத்துள்ள உங்கள சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போதுஉங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில்முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம்.அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சுசெய்யவும். நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாகஉங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தைகிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதைகிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.

அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.




தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ஒட்டுப்போடுங்கள். ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

No comments:

Post a Comment