Saturday, December 10, 2011

நடிகை சுவாதியை திருமணம் செய்யும் ஐடியா இல்லை. - தேவிஸ்ரீபிரசாத்

சார்மி, சுவாதி என நடிகைகளுடன் தொடர்புபடுத்தி வரும் கிசுகிசு பற்றி இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியது: எந்த இசை அமைப்பாளரும் என்னைப்போல் நடிகைகளுடன் தொடர்புபடுத்தி கிசுகிசுவில் சிக்கியதில்லை. இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. முதலில் மம்தா மோகன்தாஸுடன் காதல் என்றனர். சார்மியை திருமணம் செய்யப்போவதாக எழுதினார்கள். இப்போது சுவாதியுடன் இணைத்து எழுதுகிறார்கள். 


இந்த நடிகைகள் எல்லோருமே எனக்கு நல்ல தோழிகள். சுவாதியுடன் மேடைகளில் ஜோடி சேர்ந்து ஆடியதால் அவரை மணக்கப்போவதாக சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. என் பெற்றோர் என்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள். ஆனால் திருமணம் ஆன பலர் இப்போது பேச்சுலர் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். 
எனவே இப்போதைக்கு திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை. இசையில்தான் கவனம். வார இறுதிநாட்களில் நான் பார்ட்டிகளில் பொழுதை கழிப்பதாக நினைக்கிறார்கள். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும்கூட எனக்கு நேரம் இல்லை. இசையில் பிஸியாக இருக்கிறேன்.

No comments:

Post a Comment