ஷாருக்கான் நடித்த ரா ஒன் படம் சமீபத்தில் ரிலீசானது? படத்தில் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் நடித்துள்ளார். மும்பை சென்று இதற்கான படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து கொடுத்து வந்தார். இதையடுத்து ஷாருக்கான் சென்னை வந்து ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இப்படத்தில் நடித்ததற்காக ரஜினி சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு விலை உயர்ந்த பி.எம். டபிள்யூ 7 சீரியஸ் என்ற சொகுசு காரை ஷாருக்கான் பரிசாக அளிக்க முன் வந்ததாகவும் அந்த காரை வாங்க ரஜினி மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியானது. இதற்கு ஷாருக்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ரஜினிக்கும் ரா ஒன் படத்தில் பணியாற்றிய வேறு சிலருக்கும் பி.எம்.டபிள்யூ காரை நான் பரிசளிக்க போவதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல. அது வெறும் வதந்தி தான். இந்த வதந்தி யாரிடம் இருந்து பரவியது என்று தெரியவில்லை. எப்படித்தான் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்களோ என புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
|
No comments:
Post a Comment