Kolkatta, India: Global software major Microsoft yesterday (Thursday) said, India is no longer a preferred destination for Multinational Corporations. Asked to throw more light on ‘preferred destination’, Microsoft India chairman Bhaskar Pramanik said, “I think we look at everywhere in the world. I think choices are many”
Mr. Pramanik later clarified that he was speaking about Multinational technology and IT companies. “I think a lot of that need to be resolved. We have to be cautious about any new investment in India” he said.
உலக சாஃப்ட்வேர் ஜயன்ட் நிறுவனம் மைக்ரோசாஃப்ட், தமது அபிமானத்துக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா கிடையாது என்று நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் இந்தியாவில் (கொல்கத்தா) தமது ரிசர்ச் அன்டு டெவலப்மென்ட் சென்டர் (R&D centre) ஒன்றை அமைப்பதற்காக வைத்திருந்த திட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் (இந்தியா) சேர்மன் பாஸ்கர் ப்ரமானிக்
“பன்னாட்டு நிறுவனங்களின் (Multinational Corporation -MNC) அபிமானத்துக்குரிய நாடாக இந்தியா திகழ்ந்த காலம் இப்போது இல்லை. இந்தியாவுக்கு வருவதில் இனியும் அர்த்தம் ஏதும் கிடையாது என்பதை பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்து கொண்டுள்ளன. நாம் (மைக்ரோசாஃப்ட்) இந்தியாவில் இயங்குவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார் மைக்ரோசாஃப்ட் (இந்தியா) சேர்மன் பாஸ்கர் ப்ரமானிக்.
பிஸினெஸ் வேர்ல்டு சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்ஃபோ-காம் கான்பிரன்ஸில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியா தொடர்பாக பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்களின் தற்போதைய மனநிலையையே தனது பேச்சு பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“நிறைய சிக்கல்கள் இங்கு தீர்த்து வைக்க வேண்டியுள்ளன. அதை தீர்க்கப்படும்வரை இந்தியாவில் பணத்தை முதலீடு செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டவே செய்வார்கள்” என்று தெரிவித்த ப்ரமானிக்கிடம், “இந்தியாவில் இருந்து விலகிச் செல்வதென்றால், பன்னாட்டு நிறுவனங்களின் அபிமானத்துக்குரிய நாடு எது?” என்ற கேள்விஎழுப்பப்பட்டது.
“மற்றைய பன்னாட்டு நிறுவனங்கள் எங்கே செல்லப் போகின்றன என்பதை நான் கூற முடியாது. மைக்ரோசாஃப்ட்டைப் பொறுத்தவரை நாங்கள் உலகின் எந்தப் பகுதியிலும் ஆபரேஷன் தொடங்குவதை திறந்த மனதுடன் அணுகுகிறோம். அந்த விதத்தில் எமக்கு நிறையவே சாய்ஸ்கள் உள்ளன” என்பது அவர் கூறிய பதில்.
வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்களின் இந்திய வருகை (FDI) தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும், அந்தத் திட்டம் இடைநிறுத்தப் பட்டுள்ளதும் மைக்ரோசாஃப்ட்டின் முடிவுக்கு காரணமா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. “FDI விமான வர்த்தகத்திலும், ரீடெயில் வர்த்தகத்திலும் நல்ல திட்டம்” என்று சொன்னதுடன் நிறுத்திக் கொண்டார்.
அந்தத் திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்புதான் சர்வதேச நிறுவனங்களை மிரள வைத்திருக்கின்றது என்று சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம். இன்றைக்கு வால்-மார்ட்டுக்கு நடந்த கதி நாளைக்கே தமக்கும் ஏற்படலாம் என்ற பயம்தான் இதற்கான காரணம்.
ப்ரமானிக் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், எமக்கு தெரியாதா என்ன? இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் போன்ற சில தென்கிழக்காசிய நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய (முன்னாள் கம்யூனிச) நாடுகளில் சிலவும்தான் தற்போது மைக்ரோசாஃப்ட்டின் ஷாப்பிங் லிஸ்டில் உள்ள நாடுகள்! இந்தியாவில் தற்போது இயங்கும் கால்-சென்டர்கள் சிலவும் அதே திசையை நோக்கித்தான் செல்கின்றன.
|
No comments:
Post a Comment