Saturday, December 10, 2011

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொலைகள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த கொலைகள் குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து... அதன் நகலை அனுப்பவேண்டும்’ என ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து... தீட்சிதர்கள் தரப்பை ஹைவோல்ட் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
நீதிமன்ற விவகாரத்தைப் பார்க்கும் முன்... சிதம்பரம் கோயிலில் நடந்ததாகச்சொல்லப்படும் மூன்று கொலை விவகாரங்களைப் பார்க்கலாம்.

கொலை-1:

ஆமூர் செல்வராஜ் என்பவரின் மனைவி ராஜகுமாரி அடிக்கடி நடராஜர் கோயிலுக்குப் போய் வந்தார். இந்த நிலையில் சில தீட்சிதர்கள்... அவரை தங்கள் மன்மதப் பிடியில் மடக்கினர். இந்தத் தகவல் கணவர் செல்வராஜிக்கு தெரியவர... கொதித்துப்போனார். பிறகு?
“இது குறித்து தன் மனைவியிடம் செல்வராஜ் கேட்க... ராஜகுமாரியோ... "அந்தத் தீட்சிதர்கள் மிரட்டி மிரட்டி.. இப்படி பணியவச்சிட்டாங்க..' என கதறியழுதிருக்கார். உடனே... அந்தத் தீட்சிதர்களின் பெயர்களைத் தெரிஞ்சிக்கிட்டு... அவங்களைத் தட்டிக்கேட்க.. 2.7.99-ல் கோபமா கோயிலுக்குப் போயிருக்கார். போனவரை அந்தத் தீட்சிதர்கள் அடிச்சி நொறுக்கிட்டாங்க. அப்புறம் மாரியப்பன் என்பவர் மூலம் அவரை ஆட்டோவில் ஏத்தி... செல்வராஜை அவர் வீட்டில் இறக்கிப் போட்டிருக்காங்க. அப்பவே செல்வராஜிக்கு உயிர் இல்லை. கொலை பத்தி அப்பவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தும்... "அடப்போங்கய்யா. கோயி லுக்குள்ள போயெல்லாம் விசாரிக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க. "இது என்னங்க நியாயம்?' என்கிறார்கள் ஆமூர்க்காரர்கள் ஆவேசமாக.

கொலை-2:

காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு உடல்நிலை மோசமான நேரம். காங்கிரஸ் நகர சேர்மனாக இருந்த சந்திரபாண்டியன் தரப்புக் கதர்ச்சட்டைகள்... சித்திரகுப்தனுக்கு சிறப்பு பூஜைகளை செய்துகொண் டிருந்தனர். அந்த பூஜையில் பங்குகொண்டு மந்திரம் ஓதிக்கொண்டிருந்த மூர்த்தி தீட்சிதர்.. அடுத்த கொஞ்ச நேரத்தில்... உள் பிரகாரத்தில் ரத்தக் காயங்களோடு பிணமாகக் கிடந்தார். 
“தீட்சிதர்களுக்குள் தட்சணைப் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில்தான் மூர்த்தி தீட்சி தர் கொல்லப்பட்டிருக்கார். கோயிலுக்குப் போன மாஜி கவுன்சிலர் ராஜ்குமார்.. இதுபற்றி புகார் கொடுத்தும் போலீசார் கண்டுகொள்ளவே இல்லை என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

கொலை-3:

அதே 2001-ல் ராமர் என்பவர் கோயில் குளத்தில் பிணமாக மிதந்தார். ’’இந்த ராமர், தீட்சிதர்களுடன் எப்போதும் இருப்பவர். அவர்களுக்கு சகலத்தையும் சப்ளை பண்ணி வந்தவர். இது தவிர தீட்சிதர்களின் அத்தனை அந்தரங்க ரகசியங்களையும் அறிந்து வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் திடீர்னு பிணமா மிதந்தது எப்படி? இத்தனைக்கும் இவருக்கு நீச்சல் தெரியும். அதனால்தான் ராமரை யாரோ கொலை பண்ணி குளத் தில் போட்டிருக்காங்கன்னு சந்தேகப்பட் டோம். இது குறித்து நாங்க போலீஸ்ல தெரிவிச்சும்... அவங்க அதை ஒரு பொருட் டாகவே எடுத்துக்கலை என்கிறார்கள் கோயில் அருகே கடை வைத்திருக்கும் வியாபாரிகள்.

-இப்படி நடந்த மூன்று கொலைகளை யும் சிதம்பரம் காக்கிகள் அலட்சியப்படுத்த... முதலில் கொல்லப்பட்ட ஆமூர் செல்வ ராஜின் உறவினரான ஆமூர் இளங்கோவன் என்பவர்... கொலை விவகாரங்களைக் கிண்டிக் கிளறத் தொடங்கினார். பிறகு? 

தனது முயற்சிகள் குறித்து ஆமூர் இளங்கோவனே விவரிக்கிறார்... ""சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த கொலைகள் குறித்து விசாரிக்கவேண்டும் என்றும் குறிப்பாக.. பலராலும் சந்தேகிக்கப்படுகிற தீட்சிதர்களான தில்லை, பட்டு, ராஜா, கனகு, குப்புசாமி, முருகு, அமர்நாத் போன் றோரைத் தீவிரமாக விசாரிக்கணும்னு அரசுக்கும் காவல்துறைக்கும் ஏகப்பட்ட புகார்களை அனுப்பினேன். இதுக்கு எந்தப் பலனும் இல்லை. அதனால் மனித உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் விருத்தா சலம் ராஜுவிடம் பிரச்சினையைக் கொண்டு போனேன். இவர்... தீட்சிதர்கள் தடைபோட்ட தேவாரத்தமிழை... சிவநெறியாளர் ஆறுமுகசாமி மூலம் கோயிலுக்குள் பாட... ஏகப்பட்ட முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர். அவரின் முயற்சிக்குப் பிறகுதான் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது'' என்று சிலாகித்தார்.

நாம் அந்த வழக்கறிஞர் விருத்தாசலம் ராஜுவை யும் சந்தித்தோம். உற்சாகமாக நம்மிடம் பேச ஆரம் பித்த ராஜி ""தீட்சிதர்களின் அட்டூழியங்கள் குறித்து... ஏற்கனவே நக்கீரனில் நீங்க எழுதிய கட்டுரைகளைப் படிச்சிருக்கேன். எதற்கும் அஞ்சாதவர்களான தீட்சிதர்கள்.. கொலைகளையும் செய்திருப் பார்களா என... ஒரு குழுவாக விசா ரணையில் இறங்கினோம். அவர்களின் குற்றங்கள் உறுதியானது. இந்தக் கொலை களுக்கான முதல்கட்ட ஆதாரங்களைத் திரட்டினோம். பிறகு சென்னை உயர்நீதி மன்றத்தின் கவனத்துக்கு... இதை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களான ரத்தினம், சத்திய சந்திரன் ஆகியோர் மூலம் எடுத்துச் சென்று... "கொலைகளைக் கண்டுகொள்ளாத இந்த போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என்று கோரிக்கை வைத்தோம். 

நீதிமன்றம் இது குறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்க... தற்போதைய கூடுதல் டி.ஜி.பி.ராதாகிருஷ்ணனும், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ராமலிங்கமும்... இந்த சம்பவங்கள் குறித்து யாரும் புகார் தரவில்லை என்று மழுப்பல் பதிலை அபிடவிட்டாகத் தாக்கல் செய்தார்கள். நீதியரசர் கே.என்.பாஷா... முதலில் இந்த மூன்று கொலை வழக்கின் பேரிலும் எஃப்.ஐ.ஆரை. பதிவுசெய்து... அதை நீதிமன்றத்துக்கு அனுப்பும்படி அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இது எங்களுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான முதல்கட்ட வெற்றி. இந்த கொலைவழக்குகள் விசாரணைக்கு வரும்போதும்... தீட்சிதர்களின் கொலைகுற்றங்களை கோர்ட்டில் ஆதாரப் பூர்வமாக நிரூபிப்போம். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கித்தராமல் ஓயமாட்டோம்'' என்கிறார் பூரிப்பாக.

உயர்நீதி மன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால்... ரொம்ப வே வயிறு கலங்கிப் போயிருக்கிறது தீட்சி தர்கள் தரப்பு.

No comments:

Post a Comment