Saturday, December 10, 2011

இனிமே... நோ கிஸ்!- அஞ்சலி

'அங்காடித் தெரு' அஞ்சலியுடன் ஒரு ஹாய் , ஹலோ...
''எல்லாரும் டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆசைப்படுவாங்க. நீங்க புதுமுகங்களாத் தேடித் தேடி நடிக்கக் காரணம் என்ன?''

'' 'கற்றது தமிழ்' ஜீவா சார் பெரிய ஹீரோதான். அவர், 'எனக்கு புதுமுகப் பொண்ணு வேணாம். பாப்புலர் ஹீரோயின்தான் வேணும்'னு சொல்லி இருந்தா, என் கதி என்ன ஆகி இருக்கும்? புதுமுகத்தோட மட்டும்தான் நடிக்கணும்னு சாமிக்கு வேண்டுதல் எல்லாம் இல்லை, அது தானா அமையுது! என் கேரக்டர் நல்லா இருந்தா... சம்மதம்தான்!''

'' 'மகிழ்ச்சி' படத்திலும் 'லிப் டு லிப்' நெருக்கம் தெரிகிறதே?''
''கதைப்படி அதில் நான் ஹீரோவின் அத்தை மகள். கிராமங்களில் மாமனிடம் நெருக்கமா இருப்பது யதார்த்தம்தானே? என்னை யார் பார்த்தாலும் 'அங்காடித் தெரு'வில் என் நடிப்பைப் பாராட்டிட்டு, அந்த முத்தக் காட்சியைத்தான் விலாவாரியாக் கேட்கிறாங்க. அதைப்போல, 'மகிழ்ச்சி'யிலும் அதே கேள்வி ஆரம்பிச்சிடுச்சா? போதும் சாமி, இனிமே முத்தக் காட்சியில் நடிக்கவே மாட்டேன்!''



'சிந்து சமவெளி' அனகா முதலில் ஒப்பந்தமானது, 'மைனா' படத்திலாம். படப்பிடிப்பில் இடைவெளி ஏற்பட... கிடைத்த கேப்பில் சாமி படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் அனகா. 'சிந்து சமவெளி' படத்தைப் பார்த்து டென்ஷனான 'மைனா' டைரக்டர் பிரபு சாலமன், ''உனக்குத் தமிழ் சினிமாவில் பெரிய ஓப்பனிங் கிடைக்கும்னு கனவில் இருந்தேன். நீயோ, மாமனாரை வளைச்சுப்போடுற கேரக்டர்ல எப்படித்தான் ஒப்புக்கிட்டு நடிச்சியோ?'' என்று மைனாவுக்கு செம பரேடாம்!

'பையா' சூப்பர் ஹிட் கொடுத்தும் டைரக்டர் லிங்குசாமிக்கு அடுத்த படத்துக்கான ஹீரோவின் தேதிகள் அமையவில்லை. முதலில் சிம்பு... அப்புறம் விஜய்... இருவருக்கும் கால்ஷீட் அமையாமல் இழுக்க, ஆர்யாவை அமுக்கிவிட்டார் லிங்கு. படத்தின் தலைப்பு 'வேட்டை' பாஸ் ஆர்யா... இனி பிக் பாஸ்!



மலைத் தொடர் நடிகை பல்டி அடித்துப் பார்த்தும் கார்டன் மேடம் தரிசனம் கிடைக்கவில்லை. வேறு ரூட்டில் வேலையை ஆரம்பித்துவிட்டாராம் நடிகை. கட்சியின் கரைவேட்டிகளை கரெக்ட் செய்து கல்லா கட்டுகிறாராம் இப்போது!



அரசியல் நட்சத்திரத்தின் துணைவருக்கு கிசுகிசு ஹீரோயின் மீது பொல்லாத மோகமாம். அவுட்டோர் போயிருந்தபோது, அம்மணியின் கையைப் பிடித்து கண்ணீர் மல்க ஆசையைச் சொன்னாராம். சாரின் அழுகைக் கதை கேட்டு, யூனிட் இன்னும் சிரிக்கிறது!

No comments:

Post a Comment