விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வரும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
விஜய் நடித்த சச்சின் படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார். படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய நாளில் படத்தின் விளம்பரங்கள் பேப்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எவ்வித விளம்பரமும் இல்லாமல் படப்பிடிப்பை துவங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்னவென்று விசாரித்தால், ஏ.ஆர்.முருகதாஸ் ஏழாம் அறிவு படத்தினை போலவே மொத்த படத்தினை முடித்து விட்டு படத்தினை விளம்பரப்படுத்தால் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம்.
ஏழாம் அறிவு படத்தின் விளம்பரம் வெளிவரும் முன்பே படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அது போல இப்படத்திற்கு எந்த ஒரு தகவலும் வெளியாக கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். துப்பாக்கி படத்தினை பற்றி இதுவரை வந்த தகவலில் எதுவுமே உண்மையில்லையாம்.
துப்பாக்கி தோட்டாவை போல சீறி பாய இருக்கிறார் விஜய் என்பது மட்டும் உறுதி.
|
No comments:
Post a Comment