இதனால் சகல தமிழர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், மிக விரைவில், தமிழகத்தின் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்க இருக்கும் பிரபலங்கள் வீட்டு வாரிசுகளைப்பற்றி ஒரு நியூஸ் ரீல் முன்னோட்டம் இங்கே...
அக்ஷரா ஹாசன், த/பெ. கமல்ஹாசன்
அக்ஷரா ஹாசனுக்கு இப்போது வயது 20. மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோயின் எனச் செய்தி ஏதாவது முளைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது அக்ஷரா ஸ்டைல். கால் பந்து வீரர் டேவிட் பெக்காம்தான் அக்ஷராவின் ட்ரீம் ஹீரோ. அம்மா சரிகா நடிக்க, ராகுல் தொல்கியா இயக்கிய 'சொசைட்டி’ என்னும் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் அக்ஷரா. சினிமாட்டோகிராஃபியிலும் ஆர்வம் அதிகம். எடிட்டிங், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என கேமராவுக்குப் பின் உள்ள விஷயங்கள் மீதுதான் இப்போது அக்ஷராவின் கவனம். சல்சா, ஹிப் ஹாப், பால்ரூம் லாட்டின் என அத்தனை வித நடனங்களையும் பயின்று இருக்கிறார். வெளி இடங்களில் பேசாமல் சமர்த்தாக இருக்கும் அக்ஷரா, பள்ளியில் படிக்கும்போது குறும்புக்கார மாணவியாம். அக்ஷராவுக்கு காமெடியும் ஆக்ஷனும் அவ்வளவு இஷ்டம். பிடித்த படம் 'மேட்ரிக்ஸ்’. சினிமாவில் பிடித்த ஹீரோ... அப்பா கமல் மட்டுமே!
மணிரத்னம் - சுஹாசினியின் மகன் நந்தன். டீன்-ஏஜ் தாண்டியும் இன்னமும் பால் முகம் மாறவில்லை! தீவிரமான வாதப் பிரதிவாதங்களுடன் 'கான்டோர்ஸ் ஆஃப் லெனினிசம்’ (Contours of Leninism) என்ற புத்தகத்தை எழுதியபோது நந்தனின் வயது 16. அவ்வப்போது 'மார்க்சிஸ்ட்’ போன்ற தத்துவ இதழ்களில் நந்தனின் கட்டுரைகளும் வெளிவரும்!
அம்மா - அப்பாவின் சினிமா கனெக்ஷன்பற்றியோ, தான் இன்னாரின் மகன் என்றோ எங்கும் எப்போ தும் அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார். தன் தாய் - தந்தை குறித்து யாராவது கேட்டால், இருவரும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே சொல்வாராம். குறிப்பாக விசாரித்தால் மட்டுமே பெற்றோர் யார் என்ற விவரம் சொல்வாராம்.
நந்தன், இப்போது இங்கிலாந்தின் எடின்பரோ பல்கலைக்கழக மாணவர். மார்க்சியத் தத்துவங் களைப் படிக்கத் தொடங்கியதே நந்தனின் அரசி யல் ஈடுபாட்டுக்குக் காரணம். உலக இலக்கியங்கள் மற்றும் சித்தாந்தங்கள் குறித்த நூல்களை எல்லாம் வாசித்து இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் பங்கேற்பது வழக்கம். ஒரு முறை நிருபர் ஒருவர், ''உங்கள் பெற்றோர் நீங்கள் இப்படி ஒரு கட்சியின் தொண்டராகப் பணியாற்றுவது குறித்து என்ன நினைக்கிறார்கள்?'' என்று கேட்க, ''என்னைப் போல் இங்கு பலர் வந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் குறித்து இப்படிக் கேட்காத நீங்கள், என்னிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?'' என்று கேள்வியையே பதிலாக அளித்தார். பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி போன்றவர்களிடம் அரசியலும் தத்துவமும் பேசுவாராம் நந்தன். இங்கிலாந்தில் இருந்தாலும் பரமக்குடி படுகொலைகளில் இருந்து பல்வேறு அரசியல் விவகா ரங்கள் வரை சமூக இணையதளங் களில் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்!
விஜய் பிரபாகரன், த/பெ. 'கேப்டன்’ விஜயகாந்த்
அப்பாவின் பாணியில் முதலில் சினிமாவில் கால் பதிக்க இருக் கிறார் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன். சில மாதங் களுக்கு முன் வரைகூட தம்பி ஏக வெயிட். ஆனால், ஒவ்வொரு நாளும் ட்ரில் எடுக்கும் கடுமையான உடற்பயிற்சிகள் அவரைச் செதுக்குகின்றன. எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மூன்றாவது வருஷம் பொறியியல் படிக்கும் பிரபாகரனுக்குப் பிடித்தது... சினிமாவும் கிரிக்கெட்டும். விஜயகாந்த்துக்கு கிரிக்கெட் வீரர்களை அறிமுகப்படுத்தி விளையாட்டின் மீது ஆர்வம் உண்டாக்கியதே இவர்தான். ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும் மாயா ஜால் மைதானத்துக்கு கிரிக்கெட் பேட் சகிதம் கிளம்பிவிடுவார் விஜய். அணியின் கேப்டன்... வேறு யாராக இருக்க முடியும்? கேப்டன் மகன்தான் கேப்டன்!
அடிக்கடி ஹேர் ஸ்டைல் மாற்றுவது பிரபாகரனின் பொழுதுபோக்கு. 'ஸ்பைக்’தான் பிடித்த ஹேர் ஸ்டைல். ஒவ்வொரு வருட விடுமுறையிலும் வெளிநாடு போய்விடுவார். அரசியலிலும் விருப்பம் உண்டு. ஆனால், அரசியலில் நேரடி என்ட்ரி கொடுப்பதற்கு இது நேரம் இல்லை என்று நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார்.
கல்லூரியில் மாணவர்கள் என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்வார். பிடித்த நடிகை எமி ஜாக்சன். பிடித்த நடிகர்..? விஜயகாந்த் தவிர வேறு யாராக இருக்க முடியும்? சந்தானம் காமெடி பிடிக்கும். 21 வயது பிரபாகரனுக்கு சாக்லேட்கள் என்றால் இப்போதும் உயிர். ஃபேஸ்புக் பக்கத்தில் பிடித்த வாக்கியமாக எழுதிஇருப்பது... 'வம்புச் சண்டைக்குப் போறது இல்லை... வந்த சண்டையை விடுவதுஇல்லை!’
கௌதம், த/பெ. 'நடிகர்’ கார்த்திக், தலைவர், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
கார்த்திக் - ராகினியின் முதல் வாரிசு கௌதம். வீட்டில் சார் செம செல்லம். கௌதம் குன்னூரில் படிக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு இடம்பெயர்ந்தார் ராகினி. கௌதமுக்கு அப்படியே அப்பா கார்த்திக்கின் மேனரிஸம். இப்போது 18 வயதை எட்டிப் பிடித்து இருக்கும் கௌதம், பெங்களூரில் ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கிறார். கௌதமின் படங்கள், தகவல்கள் துளியும் கசியாமல் கார்த்திக் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார். விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கத் தயாராகிவருகிறார் கௌதம். பெங்களூரு நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி எடுத்துவரும் கௌதம், அடுத்த வருடம் அனுபம் கெர் நடத்தும் நடிப்புப்பள்ளியில் சேர மும்பைக்குச் செல்லலாம்!
வீட்டுக்கு எந்த விருந்தினர் வந்தா லும் தன் மகன்கள் கௌதம், காயன்பற்றிப் பெருமையாகப் பேசுவார் கார்த்திக். ஆனால், யார் கண்ணிலும் அவர்களைக் காட்ட மாட்டார். நெருங்கிய உறவினர் - நண்பர்களே கௌதமைப் பார்த்து வருஷமாச்சு என்கிறார்கள். மணிரத்னத்திடம் கௌதமுக்கான அழகான காதல் கதை ரெடி. கௌதம் மேனனும் கௌதமை அறிமுகப்படுத்தக் காத்து இருக்கிறார். தேர்ந்தெடுத்த ஹாலிவுட் படங்களை மகனைப் பார்க்கவைத்துக்கொண்டே இருக்கிறார் கார்த்திக்.
குறளரசன், த/பெ. விஜய. டி.ராஜேந்தர்
|
No comments:
Post a Comment