Tuesday, December 6, 2011

வயர்லெஸ் மூலம் பிறேக் பிடிக்கக்கூடிய சைக்கிள் கண்டுபிடிப்பு

தொழில்நுட்பட்தின் வியக்கத்தகு சாதனைகளும் கண்டுபிடிப்புக்களும் ஏராளம் . அந்த வகையில் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ள புதிய முயற்சிதான் வயர்லஸ் துவிச்சக்கர வண்டி. ஆம்.. பொதுவாக கேபிள்கள் மூலமே மோ. சைக்கள் மற்றும் சைக்கிள்களுக்கான பிறேக் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தற்போது வயர் மூலமாக பிறேக் பிடிக்க கூடியவாறு புத்தம் புதிய சைக்கிளை வடிவமைத்துள்ளார்களாம் யேர்மனியின் சார்லண்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள். இதற்காக கணணியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். எனவே மிக விரைவில் இவ்வாறு வயர்லஸ் மூலமாக பிறேக் பிடிக்க கூடிய சைக்கிள்களை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். இது ஒரு ஆச்சரியப்படவைக்கும் கண்டுபிடிப்பு எனவும் விரைவில் அனைவரும் வயர்லஸ் பிறேக்குடன் கூடிய சைக்கிள் பாவிக்க முடியும் எனவும் பல்களைக்கழக பேராசிரியரான ஹோக்லர் என்பவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment