மார்பிங் தொழில் நுட்பம் மூலம் மாற்றம் செய்யப்பட்ட தன்னுடைய ஆபாசப் படத்தை வெளியிட்டதாக 'FHM இந்தியா' இதழின் மீது பாக்கிஸ்தான் நடிகை வீணா மாலிக் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை,
அந்த இதழை வெளியிடும் நிறுவனம் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப் படத்தினை எடுப்பதற்காக அவருக்கு பெருமளவு பணம் கொடுக்கப்பட்டதாகவும், அவரது சம்மதத்துடனேயே அப்படம் எடுக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்தப் படம் அச் சஞ்சிகையில் வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பெருமளவில் எதிர்ப்புக்கள் கிளம்பவே நடிகை வீணா மாலிக் அவ்வாறு ஒரு படம் எடுக்க தான் அனுமதிக்கவில்லை என மறுத்ததுடன், மார்பிங் படம் மூலம் தனது கௌரவத்துக்கு களங்கம் கற்பித்ததாக, அப் பத்திரிகை மீது மான நஷ்ட வழக்கையும் தொடுத்துள்ளதாக அறியப்படுகிறது.
படத்தில் தெரியும் ஐ.எஸ்.ஐ என்ற பாகிஸ்த்தான் உளவு நிறுவனத்தைக் குறிக்கும் எழுத்துக்கள் தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதில் கூட அவர் அக்கறை காட்டியிருந்தார் என்கிறது அவரது குற்றச்சாட்டை மறுக்கும் மேற்படி பத்திரிகை நிறுவனம்.
இந் நிறுவனத்தின் அட்டைப்படத்தில் தோன்றும் நடிகைகள் பலர் இவ்வாறான சர்ச்சைகள்குள் சிக்கிக் கொள்வதும், பின்னர் கண்ணீர் விடுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. நடிகை காஜல் அகர்வாலும் அன்மையில் இவ்வாறான சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இவ்வாறான சர்ச்சைகளில் காட்சி, கண்ணீர், வழக்கு, எல்லாம் சினிமாக்காட்சிகள் போன்றதே என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
|
No comments:
Post a Comment