நான் அவன் இல்லை, அரவான் ஆகிய படங்களில் நடித்தவர் சுவேதா மேனன். ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.
ரதிநிர்வேதம் என்ற படத்தில் இவர் கவர்ச்சியாக நடித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.சினிமா என்பது ஒரு தொழில். கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதிலும் தவறில்லை என்று நடிகை சுவேதா மேனன் கூறினார்.
இதுதவிர பல்வேறு விளம்பர படங்களிலும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீனிவாச மேனன் என்பவரை இவர் கடந்த ஜூனில் திருமணம் செய்துகொண்டார்.
சுவேதா மேனன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்வதில் பெண்கள் கைதேர்ந்தவர்கள். ஒரே நேரத்தில் நடிப்பு, குடும்பம் இரண்டையும் என்னால் கவனிக்க முடிகிறது. திருமணத்துக்கு பிறகு எவ்வளவு நேரம் குடும்பத்துக்காக செலவிடுகிறேன் என்பதைவிட, அவர்களுக்கு உபயோகமாக எவ்வளவு நேரம் செலவிடுகிறேன் என்பதைத்தான் முக்கியமாக பார்க்கிறேன்.
சினிமா ஒரு தொழில். அதில் சாதாரண வேடம், கவர்ச்சி வேடம் என்ற வித்தியாசங்கள் கிடையாது. கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் தவறில்லை. நான் மட்டுமல்ல, என் கணவரும் இதை நன்கு புரிந்திருக்கிறார். நடிப்பு தொழிலை நான் தொடர்ந்து செய்வதற்கு அவர் அதிகபட்சமாக உதவி செய்கிறார். எனது முன்னேற்றத்தில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். இவ்வாறு சுவேதா மேனன் கூறினார்.
|
No comments:
Post a Comment