புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என்.ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது. முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்தலை தாமதப்படுத்தும் எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும்.
28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாதவிடாய் பருவமாகும். மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும். மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே ஒதுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது. உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் புள்ளி விவரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. 20க்கு குறைந்தோ அல்லது முப்பதுக்கு மேற்பட்டோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தாயின் உடல் ரீதியாகவும், குழந்தையின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வெளிவருவதற்கு சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும். முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் இதற்கான பரிசோதனைகள் முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப்போது அதிகரித்துள்ளன. கர்ப்பம் தரித்தபின்னர் இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம். செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.
எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெறவேண்டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்
|
No comments:
Post a Comment