ஹியூமன் ரைட்ஸ் வரைக்கும் யாராவது பாலாவை தள்ளிக் கொண்டு போனால்தான் உண்டு. அந்தளவுக்கு அவரது படத்தில் நடிப்பவர்கள் மன நோயாளியாகிற அளவுக்கு அவஸ்தைகளை அனுபவித்து வருகிறார்கள். ஒன்றரைக்கண் விஷாலை சொல்வதா, அகோரி ஆர்யாவை சொல்வதா, பிச்சைக்காரி பூஜாவை சொல்வதா என்று ஒவ்வொரு படத்திலும் திணற திணற அவஸ்தைப்பட்ட கேரக்டர்கள் பாலாவை பற்றி கதை கதையாக சொல்லும்.
ஒரு நடிகனை உருவாக்குகிற விதத்தில் பாலாதான் கலையுலக பிரம்மா என்பவர்களும் உண்டு. அவர்களால் மட்டுமே பாலா படத்தில் மனமுவந்து நடிக்க முடியும் என்கிற யதார்த்தத்தையும் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டும். அந்த நம்பிக்கையை மதிக்கவும் வேண்டும். போகட்டும்... நாம் சொல்ல வந்ததும் இப்படி ஒரு அவஸ்தை காண்டம் பற்றிதான்.
பாலா அடுத்து இயக்கவிருக்கும் படம் தேயிலை தோட்ட தொழிலாளிகளை பற்றியது. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக சுமார் 200 துணை நடிகைகளை வரவழைத்த பாலா முன்தலையை மொட்டையடித்துவிட்டாராம். இவர்கள் அத்தனை பேரும் இதே முன் தலை மொட்டையோடுதான் இருக்க வேண்டுமாம் படப்பிடிப்பு முடிகிற வரைக்கும்.
பொதுவாகவே பாலா, தன் பட ஷுட்டிங் விஷயத்தில் கன்னித்தீவு ஆசாமி. ஆரம்பிக்கிற நாளைதான் உத்தரவாதமாக சொல்ல முடியும். அப்புறம்? அது ஆண்டவன் விட்ட வழி. எனவே எங்களுக்கு மூன்று படத்தில் நடித்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ, அதை முதலில் கொடுத்துவிடுங்கள் என்றார்களாம் நடிகைகள்.
|
No comments:
Post a Comment