பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்திருப்பது, நம் இளைய தலைமுறை சீரழிந்து வருவதற்கு, ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
இன்று, தவறான செக்ஸ் கலாசாரம், இந்த அளவுக்கு சிறுவர்களிடம் பரவியுள்ளதற்கு முக்கியக் காரணம்,
சமீபகாலங்களாக தமிழகத்தில் வெளிவரும் திரைப்படங்களும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் காட்சிகளும் தான்.பள்ளிக் குழந்தைகளே காதலிப்பது போன்ற காட்சிகள் வருவதும், காதலர்களுக்கு தூது போக, பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதும் இவைகளில் வழக்கமாகிவிட்டது.
அதற்கு உதாரணமாக, சென்ற ஆண்டு வெற்றிகரமாக ஓடிய, "ரேணிகுண்டா' என்ற படத்தின் காட்சிகள் இருந்தன.இன்று, தமிழ் சினிமா காட்சிகள், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் இல்லை. தமிழ் சினிமாக்களில், காதல் மட்டுமே வாழ்க்கையில் முதன்மையானது என்று சித்தரித்துக் காட்டப்படுவதும் இதற்கு முழு காரணம்.இலவச, "டிவி'க்கள் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் உட்புகுந்து, ஒன்றும் அறியாத இளம் பள்ளி மாணவ, மாணவியரின் மனதில் நஞ்சைக் கலந்து, அதுவே, பள்ளி மாணவியர் திருமணத்திற்கு முன்பாகவே தங்கள் கற்பை இழக்க வைத்து விடுகிறது.
( போட்டோவிற்கும், பதிவிற்கும் சம்பந்தம் இல்லை)
|
No comments:
Post a Comment