இந்த பிரசுரத்தின் நோக்கம், மருத்துவ ஆதாரங்களோடு பிரசுரிக்கப் படுகிறதே தவிர ஆர்வமூட்டுவதற்கு அல்ல.
இந்த விஷயத்தை தடை என்று சொல்ல பலரும் கையாளும் வழி முறைதான் மருத்துவம். எனவே, மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் சொன்ன செய்திகள், செய்தி தாள்களில் வந்தவைகளை, கீழே சேர்க்கப்பட்டுள்ளது.
அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும். எல்லாமே தவறு! உடல் நலிவு, பார்வை இழப்பு போன்றவை எல்லாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் ஏற்படுமே தவிர, சுய இன்பத்தால் அல்ல!
விந்து உற்பத்திக்கும் சுய இன்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண், பெண் உடல் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தேவைப்படுவது இருவரின் ஆரோக்கியமும் உடல் உறவு பற்றிய உடல்கூறு / உளவியல் அறிவும்தான். குழந்தை பெற முடியாத மலட்டுத்தன்மை ஆணிடமோ, பெண்ணிடமோ இருப்பதற்கான மருத்துவக் காரணங்கள் வேறு. அதற்கும் சுய இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை.
டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
உண்மையில் சுய இன்பத்தில் எந்த பிரச்சனையும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.
இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான். (- நன்றி: இந்திய தினகரன்)
ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.
ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை. ஏனென்றால்? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும். விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
தூக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
விந்து முந்துதல், அதாவது புணர்ச்சியில் ஈடுபடமுன் ஸ்கலிதம் ஆகிவிடுதல்.
இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.
போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும். ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும். (நன்றி: தினக்குரல்)
ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள். இயற்கை முறையில், எந்த பின் விளைவுகளும் இன்றி நல்ல சிகிச்சை உள்ளது.
உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உண்மையான தேன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலும் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை சக்தி பெருகி விடும் இன்ஷா அல்லாஹ்.
|
நீர்முள்ளி 100 கிராம்
ReplyDeleteஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123