ஸ்பாம்களை பெருமளவில் பரப்புவதில் உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பேன்டா லேப்ஸ் என்ற நிறுவனம் இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
இந்திய ஐபி முகவரிகள் மூலம் உலக அளவில் கிட்டத்தட்ட 10.98 சதவீத ஸ்பாம் மெயில்கள் பரவுகின்றனவாம்.
ஸ்பாம்களை அதிக அளவில் பரப்பும் நாடுகள் வரிசையி்ல் இந்தியா தவிர பிரேசில், வியட்நாம், கொரியா, அமெரிக்கா ஆகியவையும் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களில் பரவிய ஸ்பாம்களில் பெரும்பாலானவற்றை இந்த ஐந்து நாடுகளையும் சேர்ந்த ஐபி முகவரிகள்தான் பரப்பியுள்ளனவாம்.
மொத்தம் பத்து லட்சம் ஐபி முகவரிகள் மூலம் அனுப்பப்பட்ட ஐம்பது லட்சம் இமெயில்களை இதற்காக ஆய்வு செய்தது பேன்டாலேப்ஸ்.
பெருமளவிலான ஸ்பாம் மெயில்களை அனுப்பிய நகரங்கள் வரிசையில் முதலிடத்தில் சியோலும், 2வது இடத்தில் ஹனோய், 3வது இடத்தில் டெல்லி, நான்காவது இடத்தில் பகோதா, 5வது இடத்தில் சாவோ பாலோ, 6வது இடத்தில் பாங்காக்கும் உள்ளன.
கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் ரூபத்தில்தான் பெரும்பாலான ஸ்பாம் மெயில்களில் வைரஸ்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் பேன்டா லேப்ஸின் ஆய்வு கூறுகிறது.
|
No comments:
Post a Comment