30 மாணவிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோவில் பதிவு செய்து வைத்திருந்த கல்லூரி கம்ப்யூட்டர் பிரிவு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (28). இவர் மார்த்தாண்டத்தில் ஒரு கல்லூரியில் எம்சிஏ முடித்த பின் திருவனந்தபுரத்தில் பல கல்லூரிகளில் கம்ப்யூட்டர் பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அப்போது தன்னிடம் படித்த மாணவிகளை மயக்கி அவர்களுடன் உடலுறவு வைத்துள்ளார். இதற்காக பெண்களை பல லாட்ஜுகளுக்கும் ரிசார்ட்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த உடலுறவுக் காட்சிகள் பெண்களுக்குத் தெரியாமல் வீடியோவாகவும் பதிவு செய்து தனது லேப்-டாப்பில் சேவ் செய்து வைத்துள்ளார்.
இவற்றை சிடிகளாக்கி விற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இன்டர்நெட்டிலும் இந்த வீடியோக்களை விற்றுள்ளார்.
இந் நிலையில் சில தினங்களுக்கு முன் அவரது லேப்-டாப் பழுதாகி விடவே அதை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் பழுது பார்க்க கொடுத்துள்ளார்.
அதை பழுது பார்த்தவர் இந்த செக்ஸ் வீடியோக்களையும் பார்த்துவிட்டு அதிர்ந்துள்ளார். தன்னிடம் லேப்-டாப்பைக் கொடு்தத நபர் 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தனித்தனியே உடலுறவு கொண்டுள்ள வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்து போன அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அவரை திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது லேப்-டாப்பில் இருந்த ஆபாச படங்கள் அடங்கிய சிடிக்கள், வீடியோ கேமராக்கள் சிக்கின.
கிருஷ்ணகுமாரிடம் கற்பிழந்த மாணவிகள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இதுவரை இவர் மீது யாரும் புகாரும் தராததால் அவரிடமே விசாரணை நடந்து வருகிறது.
|
No comments:
Post a Comment