Tuesday, June 21, 2011

உங்கள் மனைவி நல்லவரா? கெட்டவரா? சோதித்துப் பாருங்கள்.

பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். 

ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்." (முஸ்தத்ரகுல் ஹாகிம்) 

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்; 

''நிரோகரிப்போருக்கு, (நபி) நூஹீடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகச் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக்கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடிய வில்லை, (இவர்கள்) துரோகம் செய்ததன் காரணமாக, இவர்களிடம்), ‘ நரக நெருப்பில் நுழைவோர்களுடன் நீங்களும் நழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டது.'' (திருக்குர்ஆன் 66:10) 

மேலும் அல்லாஹ் குறிப்பிடும் போது, எகிப்து நாட்டை ஆட்சி செய்து, தன்னுடைய அதிகாரங்களால் பலருக்கு மிகவும் கொடுமைகளை புரிந்த ஃபிர்அவ்னின் மனைவியின் குணத்தையும் பற்றியும் சொல்கிறான், 

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் ‘இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.’ (திருக்குர்ஆன் 66:11) 

நல்ல மனைவியானவள் இரத்த பந்த உறவு முறைகளை முறிக்காமலும், கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடியவளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களிடமும், மற்றும் குழந்தைகளிடமும் எந்த மாதிரியாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளி இடங்களிலும், வெளி நபர்களிடமும், பொது இடங்களிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனைவிகளுக்குரிய பல பங்குகளை பற்றி திருமறையானது பல இடங்களில் குறிப்பிடுகிறது. 

ஒரு மனிதன் எவ்வளவு தான் நன்னடத்தையுள்ளவனாக இருந்தாலும் சரிதான். அவனுடைய மனைவி நன்னடத்தை உடையவளாக இல்லையெனில், அவனால் ஒரு போதும் இவ்வுலகில் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் வாழ்ந்திட முடியாது. 

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 
''உலகின் அனைத்துப் பொருள்களும் அனுபவிப்பதற்காக உள்ளவைதாம்! அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி!'' (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், மிஷ்காத்) 

குடும்பம் என்பது புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தான் இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வின் அவசியத்தினை மனைவிமார்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் புகுந்த வீடுகளில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஒரு சில குடும்பங்களில் எந்த புரிந்துணர்வும் இல்லாத பட்சத்தில் தான் சிறு பிரச்சனைகள் பூதகாரமாக மாறி விடுகிறது. 

பெண்களை ஏக இறைவன் பலஹீனமாக படைத்து உள்ளான். ஆகையால் தான் அவர்கள் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியாமல் சோர்ந்து போய் கவலையும் அடைகிறார்கள். ஒவ்வொரு இல்லங்களிலும் ஏதேனும் பிரச்சனை எப்படியாவது வந்தே தீரும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்ன முடிவு என்பதினை பற்றி கணவன் மற்றும் மனைவி கலந்து ஆலாசிக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தினை பற்றியும் மனம் திறந்து பேச வேண்டும்; என்பதினை இருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் பிரச்சனை அதிகளவில் உருவாகி கணவன் மனைவி பிரிவினைக்கும் காரணமாக அது அமைந்து விடும். 

‘இன்னும் (கணவன் மனைவியாகிய) இருவருக்குள், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால், அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள், அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டு பண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) தெரிந்தவனாக,நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 4:35) 

புகுந்த வீடு, புதிய சூழ்நிலை, மாமியார், நாத்தனார் மற்றும் புதிய முகங்கள் என்று புதுமையாக இருக்கும் திருமணம் புரிந்த புதிதில் மனைவிமார்களுக்கு. எல்லாவற்றிற்கு மனம் பொறுத்து போனால் எல்லாம் நன்மையே நடக்கும் என்பதினை எண்ணிக்கொண்டால் குடும்பம் ஒளிர வாய்ப்புண்டு. 

பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். 

குடும்பத்தில் கணவன் ஒரு சிறு துளி அன்பு செலுத்தினாலும், அவள் குடும்பத்தினை நல்ல மாதிரியாக கொண்டு செல்லுவாள். மனைவியானவள் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய மனங்களையும் புரிந்து அவர்களை எப்போதும் சந்தோஷமாக குளிர வைக்க தெரிந்து வைத்து இருக்க வேண்டும். 

‘(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன.’ (திருக்குர்ஆன் 30:21) 

குடும்பம் நல்ல மாதிரியாக இருக்க வேண்டுமானால், புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மனைவிக்கு இருக்குமாயின் அந்தக் குடும்பத்தில் காலை இளந்தென்றல் எந்நேரமும் வீசிக்கொண்டே இருக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லேயே. ஒரு பெண் எல்லா விதத்திலும் குறையற்றவளாக இருப்பது சாத்தியமானதல்ல. அவளிடம் ஏதேனும் குறையோ பலவீனமோ இருந்தாலும் அதே நேரத்தில் அவளிடம் சில நல்ல அம்சங்களும் இருக்கலாம். ஆகையால் ஒரு நல்ல கணவன் மனைவியின் இருபுறங்களையும் பார்த்திடல் வேண்டும். 

மனைவியானவள் தன்னுடைய குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அவசியத்தினை பற்றி நாள் தோறும் சொல்லி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உலகக் கல்வியுடன் சேர்ந்து மார்க்க கல்வியினையும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் அந்த பிள்ளைகள் இரு உலகிலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. மார்க்கப்பற்றுள்ள பிள்ளைகளை உருவாக்க நம்மால் முடியும் என்பதினை ஒவ்வொரு மனைவியும் தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து கொள்ள வேண்டும். 

இன்றைய காலக்கட்டங்கள் பிள்ளைகள் வீணாக சுற்றி திரிய கூடிய சூழ்நிலைகளால் சூழப்பட்டு உள்ளது. ஆகையால் நாம் தான் சந்ததிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதினை தாயாக மாறக்கூடிய மனைவிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வுலகம் வீண் விரயமும் மற்றும் ஆடம்பரமும் கலந்தே உள்ளதாக இருக்கிறது. ஆகையால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதினை மனைவிமார்கள் தெரிந்து கொண்டு பிள்ளைகளை நன் முறையில் வளர்க்க வேண்டும். 

ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றும் வாசனை திரவியங்கள் அதிகளவில் பூசக்கூடாது. ஏனெனில் வெளி நபர்கள் கவனம் நம் மீது திரும்புவதற்கு இது ஒரு காரணமாக நாமே அமைத்துத் தரக்கூடாது. ஒப்பனை மற்றும் அலங்காரங்கள் நம்முடைய கணவனுக்கு மட்டுமே உரியது. பிறருக்காக அல்ல என்பதினையும் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். 

மற்றும் வெளியே செல்லும் போது கணவனின் அனுமதியை பெற்று தான் செல்ல வேண்டும். கணவனின் அனுமதி இல்லாமல் செல்லும் மனைவிகளை அவர்கள் செல்லும் வழியெங்கும் மலக்குமார்கள் சபிக்கிறார்கள். வெளி நபர்கள் முன்பாக வருவதில் மனைவிகள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதனையும் இந்த குர்ஆன் வசனம் தெளிவாக நமக்கு காட்டுகிறது. 

‘(நபியுடைய மனைவியர்) தங்களுடைய தந்தைகள் (முன்பாகவும்), தங்கள் ஆண் மக்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரிகளின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் பெண்கள் (முன்பாகவும்), தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களி(ன் முன்பாக வருவதி)லும் அவர்களின் மீது குற்றமில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:55) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப்

No comments:

Post a Comment