Wednesday, July 6, 2011

போதையில் தள்ளாடினேனா? - மறுக்கும் ஸ்ரேயா

சென்னையில் நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் குடித்துவிட்டு தள்ளாடி விழப் போனதாக தன்னைப் பற்றி வந்துள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரேயா.


கடந்த மூன்று வாரங்களில் அவரைப் பற்றி வரும் மூன்றாவது மோசமான செய்தி இது.

நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் உலா வருகின்றன.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று அளவுக்கு மீறி குடித்து போதையில் தள்ளாடியதாகக் கூறப்படுகிறது.

விருந்து முடிந்து அளவுக்கதிகமான போதையில் ஸ்ரேயா நடக்க முடியாமல் கீழே விழப்போன போது தோழிகள்தான், அவரைப் பிடித்து அழைத்துப் போய் காரில் உட்கார வைத்தார்களாம். இந்த செய்தியைப் படித்ததும் கொதித்துப் போன ஸ்ரேயா, "நான் போதையில் தள்ளாடியதாகவும், ஆட்டம் போட்டதாகவும் கிசுகிசுக்கள் பரவி இருப்பது வேதனை அளிக்கிறது. எனக்கு எதிராக இது போன்ற அவதூறு பரப்பியவர்களை சும்மா விடமாட்டேன். நான் நட்சத்திர ஓட்டல் பப்களுக்கு அபூர்வமாகத்தான் போவேன். கடந்த சில நாட்களாக எந்த பப்புக்கும் போகவில்லை.

மதுவும் அருந்தவுமில்லை. என்னைப் பற்றி இது போன்று வதந்திகளை பரப்பியது யார் என்று தெரியவில்லை. இன்டர் நெட்டில் நான் குடித்து விட்டு ஆடுவது போன்று படம் வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் செய்து அப்போட்டோவை வெளியிட்டுள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்," என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment