ஹீரோயின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும்போதே ஐஸ்வர்யா ராய் 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் அதை முழுமையாக மறைத்துவிட்டு 8 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார், என்று கூறியுள்ளார் இயக்குநர் மதுர் பண்டார்கள்.
ஐஸ்வர்யா ராயை நாயகியாகப் போட்டு ஹீரோயின் என்ற பெரிய பட்ஜெட் படத்தை ஆரம்பித்தார் மதுர் பண்டார்கர். ஆனால் படப்பிடிப்பு நடக்கும்போதுதான் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. இதனால் படத்தை தொடர முடியாத நிலை. ஐஸ்வர்யாவை நீக்கினால் கேஸ் போடுவதாக மிரட்டியிருந்தார்.
எனவே படத்திலிருந்து ஐஸ்வர்யா ராயை நீக்குவதற்கு பதில், படத்தையே கிடப்பில் போட்டுவிட்டது தயாரிப்பு நிறுவனம். ஒரு பக்கம், தாய்மைப் பேறு அடைந்ததை எண்ணி ஐஸ்வர்யா ராயும் அவரது உறவினர்களும் சந்தோஷத்தில் பரவசப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படம் நின்றுவிட்டதால் இயக்குநர் மதுர் பண்டார்கர் மற்றும் அவரது யூனிட் ஆட்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்
இந்த விவகாரத்தில் இதுவரை ஐஸ்வர்யா, அமிதாப் பச்சன் போன்றவர்கள் சொன்னவை மட்டும் செய்தியாக வந்துகொண்டிருந்தன. இப்போதுதான் முதல்முறையாக மதுர் பண்டார்கர் தனது மனதைத் திறந்துள்ளார், தனது வலைப்பதிவு மூலம்.
அதில் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
ஹீரோயின் எனது கனவுப் படம். ஒன்றரை ஆண்டுகள் ரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கப்பட்ட திரைக்கதை அது. ஆனால் இன்று அந்தப் படத்தின் கதி என்னவென்றே தெரியவில்லை. படப்பிடிப்பு மீண்டும் தொடருமா… அல்லது படம் ஒரேயடியாக நிற்குமா என்றே தெரியவில்லை.
இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஐஸ்வர்யா ராய்தான். அவர் தான் கர்ப்பமடைந்திருப்பதாக எங்களிடம் முழுமையாக மறைத்துவிட்டார். கடந்த மே மாதம் இந்தப் படத்தை கேன்ஸில் அறிவித்தோம். அப்போதே ஐஸ்வர்யா ராய் 4 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு 24 நாட்கள் கழித்துதான் ஷூட்டிங் தொடங்கியது. இந்த இடைப்பட்ட காலத்தில் சொல்ல்யிருந்தாலாவது, நான் மாற்று ஏற்பாடு செய்திருப்பேன்.
ஆனால் எல்லாவற்றையும் மூடி மறைத்து 8 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட பிறகு, திடீரென கர்ப்பத்தை அறிவித்ததால் படமே நின்றுவிட்டது.
என்ன செய்வதென்று தெரியாமல் இருட்டில் உட்கார்ந்திருப்பது போல இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் மதுர் பண்டார்கர்.Topics: ஐஸ்வர்யா ராய், கர்ப்பம், மதுர் பண்டார்கர், ஹீரோயின், mathur bandarkar, aishwarya rai, pregnancy

|
No comments:
Post a Comment