குழந்தைகள் பிறந்து 6 அல்லது ஒரு வருடங்களின் பின்னர்தான் அவற்றிற்கு பல் வளர்ச்சி காணப்படும் என்பது யாவரும் அறிந்த உண்மை. கிராமமப்புறங்களில் குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் அதை ஒரு விழாவாகவே கொண்டாடும் வழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன..
ஆனால் ஒரு குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தது என்றால் நம்புவீர்களா? ஆம் இந்த விசித்திர சம்பவம் Joanne Jones (31வயது) மற்றும் Lee (32வயது) தம்பதியினருக்கு பிறந்த ஒலிவர் என்றழைக்கப்படும் குழந்தைக்கே இவ்வாறு ஏற்பட்டுள்ளது. பிறக்கும் போதே நன்கு வளர்ச்சியடைந்து இரண்டு முன்னப்பற்களோடு பிறந்து அனைவரையும்வ வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த குழந்தை. இது உலகில் மிக மிக அரிதான ஒரு சம்பவமாகும்.
இது பற்றி குழந்தையின் பெற்றோர் கூறுகையில் நாங்கள் சந்தோசமாகவுள்ளோம்.. காரணம் எமது குழந்தை ஒரு பல்வைத்தியராக வருவதற்கு இப்பொழுதே பதிவு செய்து வந்திருக்கிறது. அது மட்டுமல்லாது எமது குழந்தையின் பற்கள் எத்தவித விகாரங்களும் இன்றி நன்கு வளர்ச்சியடைந்து அழகாகத்தான் இருக்கிறது. இதனால் நாம் மிகவும் சந்தோசப்படுகிறோம்” என தெரிவித்தனர். பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இக்குழந்தையை பலர் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment