Wednesday, July 6, 2011

டீசல் கார்களின் விலையை குறைத்தது ஃபியட்

பெட்ரோல் விலை உயர்வால், அவதிப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக தனது டீசல் கார்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது ஃபியட் நிறுவனம்.


வழக்கமாக பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை கூடுதலாக இருக்கும். இந்த நிலையில், புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் பெட்ரோல் மாடல் விலையிலேயே டீசல் மாடல்களையும் விற்பனை செய்வதாக ஃபியட் தெரிவித்துள்ளது.

இதனால், புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் டீசல் மாடல்களின் விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து ஃபியட் இந்தியா தலைவர் ராஜீவ் கபூர் கூறியதாவது:

"பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆனால், பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.அவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும் வகையில், பெட்ரோல் மாடல் விலையிலேயே புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் டீசல் மாடல்களையும் விற்பனை செய்ய உள்ளோம்.

மேலும், டீசல் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்களையும் வழங்க இருக்கிறோம். இதில், வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் ஆண்டுக்கான டீசல் செலவீனத்துக்கான கூப்பன்கள் வழங்கப்படும்.

தவிர, பழைய காரை கொடுத்து புதிய புன்ட்டோ மற்றும் லீனியா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃப்ரும் கொடுக்கிறோம்," என்று கூறினார்.

No comments:

Post a Comment