Tuesday, June 21, 2011

உலகளவில் 'ஸ்பாம்'களை பரப்புவதில் 2வது இடத்தில் இந்தியா

ஸ்பாம்களை பெருமளவில் பரப்புவதில் உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பேன்டா லேப்ஸ் என்ற நிறுவனம் இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

இந்திய ஐபி முகவரிகள் மூலம் உலக அளவில் கிட்டத்தட்ட 10.98 சதவீத ஸ்பாம் மெயில்கள் பரவுகின்றனவாம். 

ஸ்பாம்களை அதிக அளவில் பரப்பும் நாடுகள் வரிசையி்ல் இந்தியா தவிர பிரேசில், வியட்நாம், கொரியா, அமெரிக்கா ஆகியவையும் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. 

இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களில் பரவிய ஸ்பாம்களில் பெரும்பாலானவற்றை இந்த ஐந்து நாடுகளையும் சேர்ந்த ஐபி முகவரிகள்தான் பரப்பியுள்ளனவாம்.

மொத்தம் பத்து லட்சம் ஐபி முகவரிகள் மூலம் அனுப்பப்பட்ட ஐம்பது லட்சம் இமெயில்களை இதற்காக ஆய்வு செய்தது பேன்டாலேப்ஸ். 

பெருமளவிலான ஸ்பாம் மெயில்களை அனுப்பிய நகரங்கள் வரிசையில் முதலிடத்தில் சியோலும், 2வது இடத்தில் ஹனோய், 3வது இடத்தில் டெல்லி, நான்காவது இடத்தில் பகோதா, 5வது இடத்தில் சாவோ பாலோ, 6வது இடத்தில் பாங்காக்கும் உள்ளன.

கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் ரூபத்தில்தான் பெரும்பாலான ஸ்பாம் மெயில்களில் வைரஸ்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் பேன்டா லேப்ஸின் ஆய்வு கூறுகிறது.

எதை இலவசமாக வழங்க வேண்டும்?-பாடம் கற்றுத் தருகிறது கேரளா

கேரளாவில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க குறைந்த மின்சாரம் மூலம் அதிகளவில் வெளிச்சம் தரும் சிஎப்எல்​ பல்புகள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

களியக்காவிளை அருகேயுள்ள கேரள மாநிலப் பகுதியான பாறசாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 4 இடங்களில் பாறசாலை மின்வாரிய அலுவலகம் மூலம் தற்போது சிஎப்எல்​ பல்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்களிடம் இருந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 60 வாட்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட திறனுள்ள பல்புகளில் இரண்டைப் பெற்றுக் கொண்டு,​​ அதற்குப் பதிலாக 20 வாட்ஸ் அளவிலான சிஎப்எல்​ பல்புகள் இரண்டு இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் கேரளத்தில் நாள் ஒன்றுக்கு பல நூறு மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு பெருமளவு குறையும் என்றும் கேரள மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும்,​​ கேரளத்தின் பல பகுதிகளில் தெருவிளக்குகளில் சூரிய சக்தி விளக்குகளைப் பொருத்தியும் மின் சிக்கனத்தில் ஈடுபட்டுள்ளனர்.​ 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரக் கிராமங்களிலும்,​​ பல்வேறு ஊராட்சிப் பகுதிகளிலும் இந்த சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகளின் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால் பல விளக்குகள் தற்போது இயங்குவதில்லை.​ 

தமிழகத்தில் 2.7 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர்.​ ஒரு நாள் மின்தேவை 10,500 மெகாவாட்டாக உள்ளது.​ ஆனால்,​​ தேவையான அளவுக்கு மின் உற்பத்தி இல்லாததால் வரும் கோடையில் கடந்த ஆண்டுகளைப் போல,​​ மேலும் சில மணிநேரம் மின்தடை அதிகரிக்கப்படக்கூடும்.

கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதால்,​​ தற்போது அமலில் உள்ள இரண்டு மணி நேர மின்வெட்டு மே மாதம் வரை தொடரும் என ​ மாநில மின்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.​ ​ ​

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,​​ மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்பட தமிழக மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி,​​ மக்கள் நலனில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது.

ஆனால்,​​ குறைந்த அளவு மின்சாரம் மூலம் அதிகளவில் வெளிச்சம் தரும் சிஎப்எல்​ மின் விளக்குகளை அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கி,​​ மின்சிக்கனத்தில் பிற மாநிலங்களுக்கு கேரள மாநில அரசு வழிகாட்டியுள்ளது.

முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!

தமிழகத்தில் முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு 2 வருட உத்தரவாதத்துடன் கூடிய மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் இலவசமாக வினியோகிக்கப்படவுள்ளன. இவற்றைத் தயாரித்து வழங்குவது குறித்து இவற்றின் தயாரிப்பாளர்களுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தி்ல் ஏழை குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. தேர்தலில் வென்றவுடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இத் திட்டம் செப்டம்பர் 15ம் முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து முதற்கட்டமாக 25 லட்சம் மிக்சிகள், 25 லட்சம் கிரைண்டர்கள், 25 லட்சம் மின் விசிறிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மிக்சிகள் வாங்க ரூ.500 கோடியும், கிரைண்டர்கள் வாங்க ரூ.600 கோடியும், மின் விசிறிகள் வாங்க ரூ. 250 கோடியும் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தயாரித்து வழங்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு டெண்டர்களை சமர்பித்துள்ளன. இந்த டெண்டர்கள் ஜூலை 11ம் திறக்கப்பட உள்ளன.

இதற்கிடையே கிரைண்டர், மிக்சி, பேன் தயாரிப்பு நிறுவனங்களுடன் அரசு இன்று ஆலோசனை நடத்தியது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் வீரசண்முகமணி தலைமையிலான அதிகாரிகளும் நிறுவனங்களின் அதிபர்களும் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மிக்சியுடன் 2 ஜார்கள் வழங்கப்பட வேண்டும், இதில் ஒரு ஜார் 1 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், மற்ற ஜார் 400 மில்லி கொள்ளளவு கொண்டதாகவும் இருக்க வேண்டும், இந்த ஜார்கள் தரமான ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட வேண்டும், மிக்சியின் திறன் 550 வாட் இருக்க வேண்டும் என மிக்சியின் தரத்தை உறுதிப்படுத்த தமிழக அரசு விதிமுறைகளை முன் வைத்துள்ளது.

அதே போல கிரைண்டர் டேபிள் டாப் வகையிலானதாக இருக்க வேண்டும், 2 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், டிரம் தரமான ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், இதன் திறன் 150 வாட் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

மின் விசிறி டேபிள்பேனாக வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் 2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

இன்றைய கூட்டத்தில் மிக்சி மற்றும் மின் விசிறிக்கு டெல்லி, மும்பை, குர்காவ்ன் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். 
கிரைண்டருக்கு கோவை பகுதியைச் சேர்ந்த நிறுவன அதிபர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இலவசம்..புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன:

இந் நிலையில் கிரைண்டர், மிக்சி, மின் விசிறி ஆகியவை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க வட்ட வழங்கல் அதிகாரிகள் அலுவலகம், மண்டல அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 2,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து ரேஷன் கார்டுகள் வழங்குவதை முறைப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவை ரேசன் கார்டுகள் உள்ள 1 கோடியே 83 லட்சம் குடும்பத்தினருக்கு கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன.

முதுமையிலும் உடலை ஆரோக்கியமாக மாற்றும் தாம்பத்யம்

மனிதர்களுக்கு சத்தான உணவும், உடல் பயிற்சியும் எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல தாம்பத்ய உறவும் அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் மூலமும் ஆரோக்கியம் பெற முடியும்.
செக்ஸ் குறைபாடுகள் பற்றி வெளிப்படையான விவாதம் தேவை என வலி யுறுத்தும் மருத்துவர்கள் அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.செக்ஸ் உணர்வுக் குறைவு உயிருக்கே அச்சுறுத்தல் என்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் அதிக பட்ச கொலஸ்ட்ரால் அதற்கு காரணமாக இருக்கக்கூடும் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

பலனளிக்கும் யுனானி மருத்துவம்

தாம்பத்ய உறவில் ஏற்படும் குறைபாட்டினால் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர அன்பும் நெருக்கமும் குறையும். எனவே செக்ஸ் குறைபாட்டை நீட்டிக்க விடக்கூடாது.

ஆங்கில வழியில் அளிக்கப்படும் மருந்துகள் தொடர்ந்து உரிய பலனளிக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் விளைவாக உடல் எடை கூடுதல், இதய நோய்கள், புராஸ்டேட் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். ஆனால் உடலுறவுத் திறனில் மாற்றம் இருக்கும்.ஆனால் யுனானியைப் பொறுத்தவரையில் பலனை மட்டுமே தரக்கூடிய பல மருந்துகள் உள்ளன.

யுனானி மருத்துவத்தில் நோயைக் குணப்படுத்த மட்டுமின்றி நோயாளியின் உடலுக்கு சக்தி தரவும், நோய் எதிர்ப் பாற்றலை ஏற்படுத்தவும் சேர்த்தே மருந்து தரப்படுகின்றன. இதனால் நோயிலிருந்து விடுபடும் நோயாளி உடல் வனப்போடும் இளமைத் துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இயங்க முடிகிறது.

ஏனென்றால் பாதாம் பிஸ்தா, குங்கு மப்பூ, ஆப்பிள் முரபா, அக்ரூட், ஜல் கோசா, பிண்டக் போன்ற உடலுக்கு வலு சேர்க்கும் பழ வகைகளும் மூலிகைகளும் சேர்த்தே யுனானி மருந்துகள் தயார் செய்யப்படுவதால். 

ஆண்மை மிளிரச்செய்யும் டெஸ்ட்டோஸ்டீரான் 

எந்த நோயாளியாக இருந்தாலும் புதுத்தெம்புடன் நடமாட முடிகிறது என்கிற உத்தரவாதத்தை தருவதுடன், ஆண்மைக் குறைவோடு வருபவருக்கு என்ன மருந்துகள் தரப்படுகின்றன என்பதையும் கூறுகிறோம்.

பெண்மையை மிளிரச் செய்வதில் ஈஸ்ட்ரோஜனுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்மையைக் காத்து நிற்பதில் டெஸ்ட் டோஸ்டீரான் பங்கும் இருக்கிறது.இந்த டெஸ்ட்டோஸ்டீரான் அளவை அதிகரிக்க வெறும் மருந்தால் முடியாது. மருந்து வடிவில் உடலுக்கு வலுவேற்ற வேண்டியது அவசியம்.

பாதாம் பருப்பு, பிஸ்தா, அக்ரூட், ஜால்கோஜா, பிண்டக் பருப்பு, பிஸ்து கிஸ்து, அபுல்கிப்பிப், துக்மே கலியூன், துக்மே ஜர்ஜிர், குங்குமப்பூ, குஷக், சிங்காடா, கசகசா, சுக்கு, லவங்கப்பட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட யுனானி மூலிகை மருந்துகள் தரப்பட்டால் ஆண்மைக் குறைவு முற்றிலும் நீங்கும்.நடுவயதை தாண்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள் செக்சில் பட முடியாத நிலை இருக்கும். அது நிரந்தரமல்ல. தற்காலிகமானதே. மறுபடியும் உங்களை இளமைத்துள்ளலோடு வைக்க யுனானி மூலிகைகளால் முடியும்.

முதுமையிலும் தாம்பத்யம் அவசியம்

வயாக்ரா மாத்திரையை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஸ்ஸர் நிறுவனம் நடுத்தர மற்றும் முதியோரிடையே உள்ள தாம்பத்திய உறவு குறித்து உலகளாவிய அளவில் ஆய்வு நடத்தியது. அதில் 40 முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்- பெண் இருபாலர்களிடமும் நடத்தப்பட்ட ஆய்வில் முதுமையிலும் செக்சில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் கொரிய மக்கள் என்பது தெரிய வந்தது.

90% பேர் செக்ஸ் என்பது இப்போதும் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கம் எனத்தெரிவித்தனர். ஆனால் ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட சர்வேயில் 38% முதியோர் மட்டுமே தாம்பத்ய உறவில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆய்வுகள் மொத்தம் 28 நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. 

நம் நாட்டிலோ, வயதுக்கு வந்த பெண்ணோ பையனோ வீட்டில் இருந்து விட்டால் தாம்பத்யமே தவறு என்ற ரீதியில் நடுத்தர வயது பெண்கள் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால்தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

முதுமையிலும் தாம்பத்யத்தை அனுபவிக்க முடியும், அனுபவிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கூற்று. 

உடலைப் பெருக்க வைக்குமா செக்ஸ்?

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல்லை என்பது டாக்டர்களின் கருத்து.
உடல் குண்டாகும் என்பதைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்பளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து.

மன ரீதியான மாற்றத்திற்கும், உடல் ரீதியான மாற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும், உடல் பெருக்கத்திற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. மேலும் தினசரி அல்லது அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் மார்பகம் பெருக்கும் என்பதற்கோ, இடுப்பளவு அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரம் எதுவும் இல்லை.

மேலும் ஆணின் விந்தனு, பெண்ணின் ரத்தத்துடன் கலக்கும் என்பதும் கூட ஒரு மாயைதான். அதிலும் உண்மை இல்லை. 
மேலும் ஒரு ஆணின் 2 முதல் 3 மில்லி அளவிலான விந்தனுவில் அதிகபட்சம் 15 கலோரி மட்டுமே இருக்கும். எனவே உடலுறவால் பெண்களுக்கு உடம்பு பெருத்து விடும் என்பது நிச்சயம் உண்மையில்லை என்கிறார்கள் டாக்டர்கள்.

அதேசமயம், திருமணத்திற்குப் பின்னர் உடல் பெருக்கம் ஏற்படுவது என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கும் நிகழ்வுதான். ஆனால் இதற்கும், செக்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை. ஒரு நிரந்தரமான உறவு அமைவது ஏற்படுத்தும் சந்தோஷத்தால் ஆணும் சரி, பெண்ணும் சரி தங்களது உடல் ரீதியான விஷயங்களில் கவனத்தை படிப்படியாக இழக்கிறார்கள். இதனால் அவர்கள் டயட், உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் குறைகிறது. இதனால்தான் அவர்களுக்கு எடை கூடுகிறதே தவிர செக்ஸ் உறவால் அல்ல என்பது டாக்டர்கள் தரும் விளக்கம்.

மேலும் பேச்சலர்களை விட திருமணமானவர்கள் அதிகம் சாப்பிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறதகு. இந்த அதிகரித்த உணவுப் பழக்கமும் கூட உடல் எடை கூடுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

எனவே திருமணத்திற்குப் பின்னர் அதிக அளவில் செக்ஸ் வைத்தால் உடல் எடை கூடும் என்ற எண்ணத்தை கைவிடுங்ககள். மாறாக திருமணத்திற்குப் பிறகு உடல் வனப்பி்ல அதிக கவனத்தை செலுத்துங்கள். டயட்டை முறையாக கடைப்பிடிப்பது, உடற் பயிற்சிகளைத் தொடருவது என்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாறாக செக்ஸில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.

படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான்

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு? என்று கேட்கின்றனர் மருத்துவர்கள்

நிம்மதியான உறக்கம்

நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது. உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்

பெண்களுக்கு அதிக உற்சாகம்

தாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.

மாயமாகும் கலோரிகள்

30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும். வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கற்பனைத் திறன்

தினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும் அல்லவா! ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும்.

படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன?. ஆரோக்யமான உறவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.

இங்கிலாந்தில் டிசைனர் பிரா, பேண்டீஸ்களுக்கு கிராக்கி அதிகரிப்பு

இப்போதைய பெண்களிடையே தங்களது அந்தரங்க அழகை ஆராதனை செய்யும் மோகம் அதிகமாக உள்ளதாம். பேண்டீஸ் மற்றும் பிராக்களின் விற்பனை அதிகரிப்பு மட்டுமல்லாமல் குவிந்து வரும் புதுப் புது டிசைன்களும், விதம் விதமான மாடல்களும் இதை நிரூபிப்பதாக உள்ளது. இதனால் இவற்றின் விற்பனையும் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவில் அதிகரித்துள்ளதாம்.

முன்பை விட இப்போது பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களின் விற்பனை வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 117 சதவீத உயர்வைக் கண்டுள்ளதாம் இவற்றின் விற்பனை.

உலக அளவில் இந்த விற்பனை அதிகரிப்பு காணப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களில் பல்வேறு விதமான மாடல்கள் இந்த காலகட்டத்தில் குவிந்திருக்கின்றனவாம். எத்தனை டிசைன்களை அறிமுகப்படுத்தினாலும் அவை பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறதாம். புதிய மாடல்களைக் கேட்டு வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.

பெண்களுக்கான உள்ளாடைகளில் பிராக்களுக்குத்தான் நிறைய டிசைன்களை அறிமுகப்படுத்துகின்றனர் டிசைனர்கள். பல்வேறு விதமான, வடிவிலான, பிராக்களின் பெருக்கத்தால் பெண்களுக்கு 'சூஸ்' செய்வதற்கு இப்போது நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

முன்பெல்லாம் பிராக்களை அணிவதோடு பெண்கள் நின்று விடுவார்கள். இப்போது தங்களது மார்புகளின் தேவைக்கேற்ப அணிய விரும்புகிறார்கள். இதுவும் பிரா மாடல்கள் அதிகரிப்புக்கு ஒரு காரணம்.

மேலும், பிரபல நடிகைகள், மாடல் அழகிகள் அணியும் பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களும் இப்போது பெண்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி அதே டிசைன், மாடலைக் கேட்டு வர ஆரம்பித்துள்ளனராம்.

சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த ஒரு பேஷன் டிசைன் நிறுவனம் புதிய வகை மாடல் பிராவை அறிமுகப்படுத்தியது. அது விற்பனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அத்தனை கடைகளிலும் விற்றுப் போய் விட்டதாம். முன்கூட்டியே அந்த பிரா குறித்து நிறைய விளம்பரப்படுத்தியிருந்ததால் பெண்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வந்து பிராக்களை அள்ளிக் கொண்டு போய் விட்டனர்.

இதுகுறித்து உள்ளாடை விற்பனையக உரிமையாளர் ஒருவர் கூறுகையில், முன்பை விட இப்போது உள்ளாடைகள் மீது பெண்களுக்கு புதிய மோகம், கூடுதல் அக்கறை பிறந்துள்ளது. முன்பெல்லாம் எந்தவித டிசைனும் இல்லாமல், பிரா மற்றும் பேண்டீஸ் அணிந்து வந்த பெண்கள் இப்போது டிசைன்களை எதிர்பார்க்கிறார்கள்.

விதம் விதமான மாடல்களை அவர்கள் விரும்புகிறார்கள். எப்படி வெளி உடைகளை விதம் விதமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதேபோல இப்போது உள்ளாடைகளையும் விதம் விதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

முன்பு மார்பழகு குறித்து அதிகம் மெனக்கெடாத பெண்கள் இப்போது விதம் விதமான பிராக்களின் மூலம் தங்களது மார்பழகை சிறப்பாக வெளிப்படுத்துவதில் அக்கறை காட்டுகிறார்கள். அதற்கேற்ப பல்வேறு வகையான பிராக்கள் மார்க்கெட்டில் தற்போது உள்ளது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை பிரா மட்டும் வாங்க பெண்கள் ஆண்டுக்கு 2700 பவுண்டுகள் வரை செலவழிக்கிறார்களாம். அதேபோல ஒவ்வொரு பெண்ணிடமும் குறைந்தது 16 வகையான பிராக்கள் இருக்கிறதாம்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இங்கிலாந்துப் பெண்களின் மார்பு அளவு சமீப ஆண்டுகளில் சராசரியாக 34பி என்பதிலிருந்து 36 டியாக உயர்ந்துள்ளதாம்.

பிரா, பேண்டீஸ் தவிர பின்னழகை எடுப்பாக காட்டக் கூடிய வகையிலான ஜீன்ஸ் பேன்ட்டுகள் உள்ளிட்ட மேலும் பல அழகு சமாச்சாரங்களும் கடைகளில் கல்லாக் கட்டிக் காத்திருப்பதால், தங்களது உடல் அழகைக் கூட்டிக் கொள்ளும் பெண்களின் அளவும் அதிகரித்தபடியே போகிறதாம்.

பெரிய மார்பு உள்ளவர்களுக்குத்தான் டிசைன்கள் என்றில்லாமல், சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கும், அவர்களது மார்பழகை எடுப்பாக காட்டக் கூடிய வகையிலான பிராக்களும் மார்க்கெட்டில் ஏராளமாக இருப்பதால் அவற்றின் விற்பனையும் அள்ளிக் கொண்டு போகிறதாம்.