Tuesday, November 22, 2011

கலைஞர் டிவியை முடக்குகிறது அமலாக்கப் பிரிவு

தி.மு.க., கட்சி பி்ன்னணியிலான கலைஞர் டிவியின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு விரைவில் முடக்க உள்ளதாக தகவல்கள் ‌வெளியாகி உள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற ஷாகி்த் பால்வா, சினியூக் பிலிம்ஸ், குசேவகான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கப்பட்டது. 2008 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த பணம் 33 தவணைகளாக கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த பணம் கடனாக மட்டுமே பெறப்பட்டதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ. 214 கோடியாக திருப்பிச் செலுத்தப்பட்டதாக கலைஞர் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சி.பி.ஐ., ஏற்கவில்லை,. இவ்விவகாரத்தில், கலைஞர் டிவி நாடகமாடுவ‌தாக சி,பி.ஐ., கூறியது. இதன்காரணமாக, கலைஞர் டிவியின் 20 பங்குகளை வைத்துள்ளவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கப்பிரிவு களமிறங்கியது.

முதற்கட்டமாக, ஷாகித் ஹுசேன் பால்வாவுக்கு சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ரூ. 233.55 கோடி சொத்துக்களை முடக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கப் பிரிவு உத்தரவு பிறப்பித்தது. இந் நிலையில் இப்போது கலைஞர் டிவி, குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் ஆகிய நிறுவனங்களின் ரூ. 13.5 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு அடுத்த உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது. இந்த உத்தரவின்படி 3 நிறுவனங்களின் அசையும்- அசையா சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கப்படவுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப் பிரிவு 4ன் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு எடுக்கவுள்ளது.

1 comment:

  1. பேசிகிட்டே இருக்கிறாங்களே தவிர செயலில் ஒன்னும் காணுமே..ஆமாம்200 கொடிக்கே கலஞர் டி.வி யை முடக்கப் போறாங்கன்னா....600 கோடி வங்கினதுக்காக சன் டி.வி மற்றும் அதன் குரூப்பையே முடக்கிடுவாங்களா....?????எப்ப..எப்ப...எப்ப..எப்ப..எப்பப்பா...????

    ReplyDelete