இன்று ஒரு வயதான மனிதரைக் காண நேர்ந்தது. வயதான, பல் இல்லாதிருந்தும் நல்ல முறையில் பேசுகிற, காதாலோ, கண்ணாலோ பயனற்றவர். தனிமையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்படி இருந்தும் அவருடன் மிகவும் சிரமப்பட்டு, கை, கால் அசைத்து, நம் பாஷை புரியவைக்க முயற்சித்தபோது சில சம்பவங்கள் அவரிடமிருந்து கேட்டு பரிதாபப் பட நேர்ந்தது.
மனைவியையும், நான்கு பிள்ளைகளையும் பல ஆண்டுகளுக்கு முன் இழந்த, யாராவது காசோ, பணமோ கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு, இல்லையென்றால் அதுவும் இல்லாத, தூங்குவதற்கு முதலில் கடையடைக்கும் நபரின் கடையைத் தேர்ந்தெடுக்கும் இவருடைய இந்தப் பழக்கம் மாதக்கணக்கில் தொடர்கிறது.
ஆதரவற்ற ஓர் அனாதையாகத் தான் நாம் பேருந்துக்குக் காத்திருந்த 50 நிமிடங்களில் நமக்கு தோன்றியது.
80 முதல் 85 வயது வரை இருக்கும் அந்த பெரியவரின் வாழ்கை என்ன?எல்லோரையும் போலவே அவரும் பிறந்தார். வளர்ந்தார். வயதானார். திருமணம் மற்றும் நான்கு குழந்தைகள் பண்ணினார். இருந்தும் இந்த வயதில் ஏன் இவரை இயற்கை. விட்டு வைத்திருக்கிறது.
பார்க்கும் மனிதரெல்லாம் என்னைப்போல் ஐந்து ரூபாய் கொடுக்க பரிதாபப் படுவதற்காகவா? நான் அதைக் கொடுத்துவிட்டு இரண்டு என்று சொன்ன இரண்டு நிமிடத்திற்குப் பிறகு “ஒரு சாயா குடிச்சிட்டு வாறேன்” என்று போனவர் போனவர்தான். நாம் பஸ்சுக்கு காத்திருந்த 50 நிமிடங்களுக்குள் அவர் வரவே இல்லை. கருணையை அவர் எதிர்பார்த்தது இறைவனிடமா? இயற்கையிடமா?
இந்த மனிதரைப் பொறுத்தவரை, பரிணாமத்தின் இலட்சியப் பயணம் எங்கே சென்று முடிவடையும்? நாம் கொடுக்கவில்லை என்றால் யாராவது கொடுப்பார்கள்? யாரும் கொடுக்கவில்லையென்றால்?
இதில் நாம் பரிதாபப் படுவதற்கும். அந்த ஐந்து ரூபாய் கொடுப்பதற்கும் மூல காரணம் யார்? தன் இனத்தின் மீதுள்ள அக்கறையிலா? பரிணாம வளர்ச்சி என்னும் லட்சியப் பணயம் தொடர்வதர்காகவா? மூளையில் இதற்காக தனி இடம் ஒதுக்கப் பட்திருக்கிறதா?
இதைவிட கொடூரமான கோரமான வேறு இனங்களை இந்த நிலையில் பார்த்தால் இதில் ஏற்படுகிற உணர்ச்சியில் நூறில் ஒரு பங்கு கூட தேறாது. ஒரு நாய் இந்த நிலையில் கிடந்தால் நாம் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அந்தந்த இனத்தை காத்துக்கொள்ள அந்தந்த இனத்திற்குத் தெரியும் என்ற எண்ணம் சிலருக்கே வந்தாலும் அது சரியான காரணம் அல்ல.
பரிணாமத்தின் குழந்தைத்தன செயல்பாடுகளான “தனக்கு ஏதாவது நல்லது செய்பவற்றுக்கே, தானும் ஏதாவது செய்ய முனைவது” என்பது மனோ தத்துவர்களின் கருத்து. அப்படியென்றால், அந்த மனிதனைக்கண்டு பரிதாபப் படுவதற்கும், ஏதாவது கொடுக்கத் தோன்றுவதற்கும், பிரதி பலனாக என்ன கிடைக்கும் என்ற நோக்கத்தில்?
பரிணாமத்தின் இலட்சியப் பயணமான இனத்தை விரிவு படுத்துதல் என்ற முனைப்பு இருந்திருந்தால்,இந்த பெரியவரால் இனி ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்திருந்தும் நாம் பரிதாபப் படுவற்குக் காரணம் என்ன,
அவர் சில நாட்களில் இறந்து பட ஆசைப்படுகிறேன்.
மீண்டும் சிந்திப்போம்.
|
No comments:
Post a Comment