தனுஷ் நடிக்கும் 3 படத்தில் இருந்து அமலா பால் நீக்கப்பட்டார். இப் படத்தை தனுஷ் இன் மனைவி ஐஸ்வர்யா இயக்குகிறார். அமலாபால் நீக்கப்பட்டது தொடர்பில் ஐஸ்வர்யா தரப்பில் ஒரு பதில் கூறப்பட்டாலும், அமலாபால் அதனை மறுத்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அமலாபால் அளித்த பேட்டியில்…..
தற்போது தமிழில் வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் மட்டும்தான் நடிக்கிறேன். சொன்ன நேரத்திற்கு நான் ஷூட்டிங் வந்துவிடுவேன்.
என் மீது எந்த தயாரிப்பாளரும் குறை சொன்னது கிடையாது. எந்த படத்தை தேர்வு செய்து நடிப்பது என யோசிக்கும் அளவுக்கு எனக்கு வாய்ப்புகள் குவிந்துகிடக்கவில்லை.
இப்போது ஷூட்டிங் முடிந்து கொச்சியில் எனது வீட்டில்தான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
3 படத்தைவிட்டு நான் வெளியேறவில்லை. கால்ஷீட் பிரச்னையும் இல்லை. வேறு எந்த முக்கிய காரணமும் இல்லை. என்னை நீக்கியதற்கு என்ன காரணம் என்பது எனக்கு தெரியும்.
அது முடிந்து போன விஷயம். விரைவில் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதுபற்றி வேறு எந்த கருத்தும் சொல்ல விருப்பமில்லை.”
இவ்வாறு அமலா பால் கூறினார்.
இப் பேட்டி மூலம் ஐஸ்வர்யா தனுஷ் – அமலா பால் உறவில் சந்தேகம் கொண்டாரா என பரவலாக சினிமா உலகில் கிசு கிசுக்கப்படுகிறது.
|
|
No comments:
Post a Comment