Tuesday, November 22, 2011

வலைப்பூக்களை இணைக்க


எனது அலுவலகத்தில் பிளாக்ஸ்பாட் தடை செய்யப்பட்டுள்ளதாக அழுது கொண்டிருக்க, வினித் மட்டும் கவலைப்பாடாமல் புகுந்து விளையாடிவருகிறான். அவனிடம் எப்படிப் பதிவுகளைப் படிப்பாய் என்றால் கூகிள் ரீடர் என்கிறான். சரி பதிவுக்கு வந்த கருத்துக்களை எப்படிப் பார்ப்பாய் என்றால் கூகிள் ரீடர் என்கிறான். பதிவை எப்படி போஸ்ட் பண்ணு வாய் அதான் மெயிலும் தடைப்பட்டுள்ளதே என்றேன் பூரிப்புடன், கூகிள் ரீடர் என்றான் சிரிப்புடன். விடுவேனா, உடனே நீ படிக்கும் தளத்தில் RSS feeds அளவாக இருந்தால் எப்படி முழுவதும் படிப்பாய் என்று சிதம்பர ரகசியத்தை கேட்ட திருப்தியிலிருக்க அவனோ அதற்கும் கூகிள் ரீடர் என்று சொல்லிப் பறந்து விட்டான்.

அடுத்து உள்மனசின் பாராளுமன்ற கூட்டுக்குழுவை வைத்து கூகிள் ரீடரை சோதிக்கத் தொடங்கினேன். ஆம், கூகிள் ரீடர் இந்த வார்த்தை அலுவலகத்தில் படிப்பவர்கள், இண்டர்நெட்டை சிக்கனமாக உபயோகிப்பவர்கள், ஒரே இடத்தில் பல பதிவுகளை படிக்க நினைப்பவர்கள் என பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டதாம். இதைப் பற்றித் தெரியாதவர்கள் வாழ்க்கையும் எதிர்புறமாகப் புரட்டிப் போடுதாம்.[நியூட்டன் 3 விதி] 
ஒவ்வொரு வலைப்பூவும் அல்லது ஒவ்வொரு தளமும் தனது பதிவுகளை எளிதாக மற்ற தளங்களுக்குச் செல்ல RSS என்கிற சமிங்கைகளாக வெளியிடும். அவற்றை பிரித்துப் படிக்க உதவும் ஒருவகை படிப்பான் இந்த கூகிள் ரீடர். இது போல சில ரீடர்கள் இருந்தாலும் இதைப் போல பல்நோக்குப் பார்வையில்லை எனலாம். 

ஒரு தளத்தை இரண்டு வகையாக இங்கு இணைத்துப் படிக்கலாம், ஒன்று நேரடியாக add subscription பட்டன் மூலம் ஒரு தளத்தின் செய்தியோடையைக் கொடுத்து இணைப்பது. மற்றொன்று பிளாக்கரில் பின்தொடரும் வலைப்பூக்கள் தானாகவந்து இணைவது. தளங்கள் எல்லாம் இடப்புறம் பட்டியலாகவும் அதன் பக்கங்கள் வலதுபுறம் விரிந்தும் இருக்கும். பொதுவாக வலைப்பூக்களை இணைக்க அதன் செய்தியோடையைப் பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment