Saturday, April 9, 2011

கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்


கடன் நிறைவேற ஓதவேண்டிய துஆ
யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக் கொண்டு உன்னுடைய ஹராமை விட்டும் என்னை போதுமாக்கச் செய்வாயாக! உன்னுடைய பேரருளைச் கொண்டு உன்னல்லாதவரை விட்டும் என்னை தெவையற்றவனாக ஆக்குவாயாக! நூல்கள்: திர்மிதி5/560 ஸஹீஹ் திர்மிதி 3/180
யா அல்லாஹ்! தூக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழைத்தனம், கடன் மிகைத்து விடுதல் ஆடவர்கள் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்: புகாரி 7/158
காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆ
யா அல்லாஹ்! நீ எதை இலகுவாக ஆக்குகின்றாயோ அதைத்தவிர இலகுவென்பது இல்லை; நீயோ கவலையை (கஷ்டத்தை)க் கூட நீ நாடினால் இலகுவாக ஆக்கிடுவாய். நூல்்: இப்னுஹிப்பான்

No comments:

Post a Comment