Monday, December 20, 2010

சீனா, இந்திய அரசு இணையதளத்தில் ஆக்கிரமிப்பு

இந்தியாவின் உயரியப் பதவிகளுக்கு தேர்வு நடத்தும் UPSC இணைய தளத்தில் சீன இணைய தளங்களுக்கு மறைமுகமாக இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

செப் 18 2010 இரவு http://upsc.gov.in இணையதளத்தில் உலவிக் கொண்டிருக்கையில் அதன் தளக் கட்டுமானம் பழைய வடிவத்தில் இருப்பதால் தற்செயலாக அதன் மூல நிரலிகளை[source code] எடுத்துப் பார்த்தேன். அதில் சற்றும் எதிர்பாராதவிதமாக சீன இணைய தளங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை சாரதாரணக் கண்களுக்குப் புலப்படாதவாறு நிரலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 36 முறை அந்நிய இணையத்திற்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது, மீண்டும் இன்றும்[sep 20] அந்த நிரலிகள் அங்கேயே உள்ளது.

பொதுவாக இந்தியா அரசு தளங்கள் தனிநபர் விளம்பரமே கொடுக்காத நிலையில் அந்நிய நாட்டு தளத்திற்கு அதுவும் மறைமுகமாக கொடுக்கப்பட்டிருப்பது புதிராகவுள்ளது. சீனாவின் இணைய ஹாக்கிங் இதில் தலையிட்டுள்ளதா? அல்லது இந்தியா பொறியாளர்களின் கவனக் குறைவாக? வேறு இந்திய இணைய தளங்களிலும் இப்படி உள்ளதா? என்கிற கேள்விகள் எனக்கு எழுகிறது.

இதனால் எனக்குத் தெரிந்து இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ள தளங்களுக்கு தர ரேங்குகள் அதிகரிக்கும். மற்றும் சில நிரலிகள் எழுதி வேண்டிய இடங்களில் இந்த இணைய தளத்தை தடை செய்யவும் முடியும். அதுதவிர வேறு எதற்கு என்று யூகிக்க முடியவில்லை.

எதுவாகயிருந்தாலும் நமது அரசு தளத்தில் மாற்று நிரலிகள் இருப்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.


1. upsc தளத்தின் மூல நிரலியின் படம் இது.
2. ஒரு தனியார் நிறுவன தளத்திற்கு 30 முறை இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
3. மற்றும் இரு தளத்திற்கு[புதிரான] இணைப்புக் கொடுக்கும் ஜாவா நிரலியுள்ளது.

upsc தளம் upsc தகவல் தொழிற்நுட்ப பிரிவின் மூலமாக பராமரிப்பட்டு, Mahanagar Telephone Nigam Limited மூலமாக வழங்கப்படுகிறது.

உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் முகவரிகள் ஏதும் என்னிடமில்லாததால் தகவல் அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.

சீனாவின் சைபர் போர்குறித்த கட்டுரை உங்கள் கவனத்திற்கு.

No comments:

Post a Comment