37 வயதாகும் சச்சின் டெண்டுல்கர், 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்தார்.
இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின், தனது 175-வது டெஸ்ட் போட்டியில் 50-வது சதத்தை அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை 1,532 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்த ஆண்டில் அவர் 7 சதங்களை விளாசியுள்ளார். அவரின் சராசாரி 85 ரன்கள் ஆகும்.
இதுவரை 175 டெஸ்ட் போட்டியில் விளையாடி 14,500 ரன்களுக்கு மேல் குவித்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையிலும் சச்சினே முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 39 சதங்களுடனும், தென்னாப்பிரிக்காவின் ஜேகஸ் காலிஸ் 37 சதங்களுடனும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் 46 சதம்
442 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 17,598 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 46 சதங்கள் அடித்துள்ள சச்சின் விரைவில் 50-வது சதத்தை அடித்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் வாழ்த்து
டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்துள்ள சச்சினுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், தென்னாப்பிரிக்க வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
ஆதாரங்களுடன் நன்றி : http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sports&artid=349031&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=தொடர்கிறது சச்சின் சகாப்தம்
சச்சின் வரலாறு:
மறுமுனையில், டிசோட்சபேயின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார் சச்சின். அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்த ஹாரிசின் ஓவரில் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்திய சச்சின், ஸ்டைன் பந்தை "ஆப்சைடில்' தட்டி விட்டு, ஒரு ரன் எடுத்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்தார்.
தொடரும் சாதனை பயணம்...
கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில் 50வது சதம் அடித்த இவர், இன்னும் பல மைல்கல்லை கடக்க காத்திருக்கிறார்.
கடந்த 1973ல் மும்பையில் பிறந்த சச்சின், இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 1988ல் பள்ளி அளவிலான ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பங்கேற்ற இவர், தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து முதல் சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இத்தொடரில் வக்கார் யூனிஸ் உள்ளிட்ட வேகங்கள் வீசிய பவுன்சரில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்ட போதும், தனது ஆட்டத்தை தொடர்ந்தார். சோதனைகளை கடந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பாராட்டும் அளவுக்கு சிகரங்களை தொட்டார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்:
* டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.
* இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
* ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் (50) அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினை சேரும்.
50 சதம் வந்த பாதை
சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:
சதம் அணி இடம் ஆண்டு
1. முதல் சதம் இங்கிலாந்து மான்செஸ்டர் 1990
2. 5வது சதம் இங்கிலாந்து சென்னை 1993
3. 10வது சதம் இங்கிலாந்து நாட்டிங்காம் 1996
4. 15வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 1998
5. 20வது சதம் நியூசிலாந்து மொகாலி 1999
6. 25வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 2001
7. 30வது சதம் இங்கிலாந்து லீட்ஸ் 2002
8. 35வது சதம் இலங்கை டில்லி 2005
9. 40வது சதம் ஆஸ்திரேலியா நாக்பூர் 2008
10. 45வது சதம் வங்கதேசம் மிர்பூர் 2010
11. 50வது சதம் தென் ஆப்ரிக்கா செஞ்சுரியன் 2010
ஆஸி.,க்கு எதிராக அதிகம்
தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11
சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7
சதங்கள் அடித்துள்ளார். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சச்சின் எடுத்த
சதங்களின் விபரம்:
அணி சதங்கள்
1. ஆஸ்திரேலியா 11
2. இலங்கை 9
3. இங்கிலாந்து 7
4. தென் ஆப்ரிக்கா 6
5. வங்கதேசம் 5
6. நியூசிலாந்து 4
7. வெஸ்ட் இண்டீஸ் 3
8. ஜிம்பாப்வே 3
9. பாகிஸ்தான் 2
தோனிக்கு பெருமை
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (200*) எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் (எதிரணி-தென் ஆப்ரிக்கா) ஏற்படுத்திய போது அவருடன் எதிர் முனையில் களத்தில் இருந்தவர் கேப்டன் தோனி. தற்போது, டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து சச்சின் மற்றொரு வரலாறு படைத்த போதும், இவருடன் களத்தில் இருந்தவர் தோனி என்ற பெருமை பெற்றுள்ளார்.
ஆதாரங்களுடன் நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=
7955&Value3=I

|
No comments:
Post a Comment