உலகம் முழுவதும் உள்ளவர்களை நண்பர்களாக இணைப்பதில் இணையதளம் முக்கியமாக செயல்படுகிறது. டுவிட்டர், ஆர்குட், பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள் மூலமாக பழைய நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்கள் தகவல்களையும் புகைப்படங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த லில்லியன் லோவே என்ற 103 வயது பாட்டி `பேஸ்புக்’ இணைய தளத்தில் உறுப்பினராக இருப்பது தெரிய வந்துள்ளது. உலகிலேயே மிகவும் வயதான `பேஸ்புக்’ உறுப்பினர், இவர் தான். பல்வேறு இடங்களில் இருக்கும் தனது பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள் ஆகியோருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க முடிகிறது என லில்லியன் மகிழ்ச்சி அடைகிறார். இந்த 103 வயது பாட்டிக்கு `பேஸ்புக்’கில் 34 நண்பர்கள் இருக்கின்றனர்.
|
No comments:
Post a Comment