Monday, December 20, 2010

தமிழ் மென்பொருட்கள் (TAMIL SOFTWARES)

"சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதி அச்சத்திற்கு எச்சமிட்டாற்போல  தொழிற்நுட்பத்தில் தேக்கநிலைதான் மிச்சமுள்ளது. அரசு பணிவாரிய தேர்வுகளில்கூட குறிப்பிட்ட துறை பாடங்களுக்கு கலைச்சொற்கள் பஞ்சத்தால் ஆங்கிலவழி முறைதான் பின்பற்றப்படுகிறது. இவை இப்படியிருக்க இணைய வெளியில் தமிழ் வளங்கள் கணிச்சமாகத்தான் உள்ளது. புதிதாக கணினி உலகிற்கு வருபவர்கள் தமிழில் உள்ள மென்பொருட்கள் பற்றி அறிவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்க இப்பதிவு உதவலாம்.
கூகிள் தமிழ் ஒலிமாற்றிப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் பரவிறக்க பதிப்பாக Input Method Editor [IME] என்கிற மென்பொருளை வழங்குகிறது. இதில் தமிழ் மூலபதிப்பை தரவிறக்கி விளக்கம் கூறியப்படி நிருவிக்க் கொள்ளலாம். அதன் பின் வேண்டிய இடங்களில் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம் அவை நோட்பேடோ அல்லது MS வேர்டாகவோ இருக்கலாம். தட்டச்சிடும் ரோமன் எழுத்துக்களின்[English] ஒலிகளுக்குத் தகுந்த தமிழ் எழுத்தை தட்டச்சிடும். சொந்த கணினியாக வைத்திருப்பவர்கள் இதை ஒருமுறை பதிப்பதன் மூலம் வலை தளங்கள் முதல் கணினி படங்கள் வரை தமிழில் அடிக்கலாம்.

கூகிள் வெளியீடுகளுக்கு முன்பே வந்த தமிழ் எடிட்டர். பல துணை கருவிகளுடன் பல வசதிகளுடன் பத்திகள் தட்டச்சு செய்யலாம். தமிழ் மொழி விளையாட்டுக் கருவிகளும் வழங்குகிறது.

இதுவும் தமிழ் சொல்செயலிதான்[word processor] ஆனால் கூடுதலாக unicode லிருந்துமொழிக்கு மாற்றும் வசதி, மற்றும் கட்டணங்களின் கீழ் இன்னபிற வசதிகளையும் வழங்குகிறது.

இது கூகிள் IME போல நிறுவி விட்டால் எல்லா கோப்புகளிலும் தமிழில் நேரடியாக தட்டச்சுயிடலாம். ஒவ்வொரு பதிப்பாக வசதிகளை மேன்படுத்திக் கொண்டேஇருக்கும் இந்த மென்பொருள் கடைசியாக அகஸ்ட் 2010 வரை வெளிவந்துள்ளது.

நியூ ஹரிஜோன் மீடியா[கிழக்கு பதிப்பகம்] தயாரிப்பில் வெளிவந்த ஒலி பெயர்ப்புக்கருவி. virtual தட்டச்சுப் பலகையும் உண்டு. ஆனால் பழகும் வரை பிரேத்தேகமான ஆங்கில எழுத்துக்களால் சில சமயம் எழுதவேண்டிவரும்.

இ-கலப்பை என்னும் மொழிமாற்றுக் கருவி. அதிகம் மேன்படுத்தப்பட்ட வடிவில் வெளிவருகிறது. இது ஒரு திறமுல மென்பொருளாகும்[open Source] இதை நீங்கள் கூட அபிவிருத்தி செய்யலாம்  

ஒவ்வொரு தமிழ் இணைய பயனரிடம் இருக்க வேண்டிய மென்பொருட்கள். இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி[TDIL] அமைப்பின் கீழ் மத்திய அரசின் மானியத்தின் மூலம் தமிழ் மொழிக்கான ஆபிஸ் சூட்[office suit] தருகிறது. டாக்யூமென்ட், ஸ்ப்ரெட்ஷீட், பிரெசேன்டேஷன், HTML எடிட்டர் மற்றும் படிம கருவிகள் வழங்குகிறது.  
தமிழ் எழுத்துருக்கள், தமிழ் எடிட்டர், தமிழ் அகராதி, தமிழ் உலாவி[browser], தமிழ் OCR[ஸ்கேன் செய்த தமிழ் பக்கங்களிலிருந்து தமிழ் எழுத்துக்களைப் படிக்க உதவும்] போன்ற மென்பொருட்களை வழங்குகிறது. இணைய வழியாகவே தரவிறக்க வசதியுள்ளது. அது போக இணைய இணைப்பில்லாதவரும் பயன் பெறும் வகையில் இலவசமாக* குறுந்தகடையும் வழங்குகிறது. 
குறுந்தகடு[cd] வேண்டுபவர்கள் இந்தப் படிவத்தில் பதிவதன்முலம் பெறலாம்.  வெளிநாட்டினற்கும் குறுந்தகடுகள் அனுப்பப்படுமாம்

http://specials.msn.co.in/ilit/Tamil.aspx
மைக்ரோசாப்டின் தமிழ் மொழியாக்க கருவி வலை தளங்களுக்கும், டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வழங்ககப்படும் சில மென்பொருட்கள்[நான் கேரேண்டி இல்லை மக்களே]

ஆனானியாக இல்லாமல் முறையான தமிழ் மென்பொருட்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment