Monday, December 20, 2010

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்

                                                    
கடந்து சென்று வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேறுவோர் பட்டியலில், உலக அளவில் மெக்சிகோ முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆசிய அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளது. குடிபெயர்தல் மற்றும் சொந்த நாட்டில் உள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்புதல் குறித்து உலக வங்கி அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: உலக அளவில் 2010ல் வெளிநாடுகளில் குடியேறி நிரந்தரமாக வசித்து வருபவர்களின் எண்ணிக்கை 21.5 கோடியாக உள்ளது. இது ஒட்டு மொத்த உலக மக்கள் தொகையில் 3 சதவீதம். இவர்களில் 57 சதவீதம் பேர் உயர் வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர். இது 1900ல் 43 சதவீதமாக இருந்தது. 2010ன் கணக்குப்படி அமெரிக்காவில் அதிகபட்சமாக 4.28 கோடி வெளிநாட்டினர் வசிக்கின்றனர். இது 2000ல் 3.48 கோடியாக இருந்தது. ஆனால், 22  லட்சம் அமெரிக்கர்கள் மட்டுமே வெளிநாட்டில் வசிக்கின்றனர். இது அங்குள்ள மக்கள் தொகையில் 1 சதவீதம். கடந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 1.14 கோடி பேர் சென்றனர். இதில் 54 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று குடியேறுவதில் உலக அளவில் முதல் 10 நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஆசியா அளவில் 2ம் இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் குடியேறியவர்களில் ஆசியாவை சேர்ந்த நாட்டினர் 79 லட்சத்துடன் 2வது இடத்தில் உள்ளனர். அதிகமாக 1 கோடி மக்களுடன் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.   சீனர்கள் 20 லட்சம், பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள் 17 லட்சம், இந்தியர்கள் 16 லட்சம் பேர் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ரூ. 2.47 லட்சம் கோடி அனுப்பியுள்ளனர். இது கடந்த 2009ல் ரூ. 2.23 லட்சம் கோடியாக இருந்தது. உலக அளவில் வெளிநாடுகளில் இருந்து 2010ல் ரூ. 19.8 லட்சம் கோடி அனு ப்பப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment