Monday, December 20, 2010

மூளை வளர்ச்சி நடுத்தர வயதுவரை நீடிக்கும் : ஆய்வில் தகவல்

human brain, health, science, puthiyaulakam.com, wonder news, tamilnews, மனிதனின் மூளை வளர்ச்சி குழந்தைபருவம் வரை மட்டுமே இருக்கும் என்பது தற்போதை கண்டுபிடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. தற்போதைய கண்டுபிடிப்பில் மூளை வளர்ச்சி நடுத்தர வயதான 30 முதல்40 வரை அதன் வளர்ச்சி இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மூளையில் உள்ள கார்டெக்ஸ் என்னும் பகுதி வளர்ச்சி அடைந்து கொண்டே இருப்பதால் தான் முடிவெடுக்கும்திறன், சமுதாய பழக்கவழக்கங்கள், திட்டமிடுதல் உட்பட பல்வேறு செயல்களை திறம்பட செயல்படுத்த முடிகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் குழந்தை பருவம் முடியும் தருவாயில் மூளையின் வளர்ச்சி நின்றுவிடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.மேற்கண்ட தீர்வின் மூலம் 40வயது வரை மூளை வளர்ச்சி அடையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது என லண்டன் யுனிவர்சிட்டி காலேஜை சேர்ந்த சாராஜெய்னிபிளாக்மோர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment