Thursday, December 22, 2011

FACEBOOK - HTC யின் புதிய கூட்டணி வெற்றியளிக்குமா?



சமூகவலையமைப்புகளின் ஜாம்பவானான பேஸ்புக் சுமார் 800 மில்லியன் வரையான பாவனையாளர்களைக் கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பேஸ்புக், கையடக்கத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான எச்.டி.சியுடன் இணைந்து அண்ட்ரோய்ட் இயங்குதளத்தில் இயங்கும் விசேட கையடக்கத்தொலைபேசி ஒன்றினைத் தயாரித்து வருகின்றது. இத்திட்டத்திற்கு ‘ பபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இன்னும் 18 மாதங்களில் இக்கையடக்கத்தொலைபேசி சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பேஸ்புக் குழுவொன்று, எச்.டி.சி மற்றும் தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் செம்சுங்குடன் இணையவே பேஸ்புக் திட்டமிருந்தபோதிலும் அது தற்போது எச்.டி.சி. உடன் கூட்டணி அமைத்துள்ளது.

எச்.டி.டி ஏற்கனவே பேஸ்புக்கிற்கென விசேட கையடக்கத்தொலைபேசிகள் இரண்டினை வெளியிட்டது. அவை சாசா, மற்றும் சல்சா எனப்பெயரிடப்பட்டன



சுமார் 350 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பாவனையாளர்களை பேஸ்புக்கொண்டுள்ளது.
இத்தொகை முன்பு என்றுமே இல்லாதவாறு மிகவேகமாக அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக அண்ட்ரோயிட், மற்றும் அப்பிளின் iOS உபகரணங்கள் ஊடான பேஸ்புக் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதனை நன்கறிந்து வைத்துள்ள பேஸ்புக் தனது சேவைக்கென பிரத்தியேகமான கையடக்கத்தொலைபேசியினை உருவாக்கும் எண்ணத்திலேயே இம்முயற்சியில் இறங்கியுள்ளது.
அப்பிள் ஐ பேட் மற்றும் ஐ போனுக்கான iOS 5 இல் டுவிட்டர் சமூக வலையமைப்பினை ஒருங்கிணைத்துள்ளது.
அதே போல் கூகுள் தனது அண்ட்ரோய்ட் 4.0 ‘ஐஸ்கிரீம் சென்விச்’ தொகுப்புடன் கூகுள் + இணையும் ஒருங்கிணைத்துள்ளது
இவ்வாறு தனது போட்டியாளர்கள் வளர்ந்துவருவதினை உணர்ந்துள்ள பேஸ்புக் தனது எச்.டி.சி உடனான தனது கூட்டணி மூலம் தகுந்த பதிலடி கொடுக்க எதிர்பார்த்துள்ளது.
ஏற்கனவே பேஸ்புக் கையடக்கதொலைபேசி தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்ததுடன் அச்செய்தியை நாம் உங்களுக்கு வழங்கியிருந்த போதிலும் பின்னர் அச்செய்தி வெறும் வதந்தியாக மாறியது
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தி நம்பும்படியாகவே உள்ளது. எது எவ்வாறு இருப்பினும் இன்னும் சில மாதங்களில் செய்தியின் உண்மைத்தன்மை வெளியாகிவிடும் அதுவரை பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment