மங்காத்தா’ படத்தினை தொடர்ந்து ‘பில்லா – 2′ படத்தில் நடித்து வருகிறார் அஜீத், ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி வருகிறார்.
பார்வதி ஒமணக்குட்டன் அஜீத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
‘பில்லா 2′ படத்தின் கடும் பாதுகாப்பு குறித்து படத்தின் இயக்குனர் சக்ரி டோல்டி சொல்லும் போது ” ‘பில்லா 2′ படத்தில் அஜீத்தின் கெட்டப் மிக முக்கியமான ஒன்று,
ஷாருக்கின் டான் 2 ரிலீஸ் ஆவதால் அஜீத்தின் கெட்டப் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது ஆகவே இவ்வளவு கெடுபிடியாக இருக்கிறோம். ஆனால் ஷாருக்கின் டான் 2 க்கும் தலயின் பில்லா 2க்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
|
No comments:
Post a Comment