Thursday, December 22, 2011

கை படாத ரோஜா மாமா! ஓ மை டியர் ஹன்ஸி!



நானும் கதைக்கக் கூடாது எண்டு தான் நினைக்கிறது. எங்க மனம் கேட்டாத்தானே! 

ஹன்ஸிகா! இவரது பெயரை ஏற்கனவே கேட்டிருந்தாலும் வேலாயுதம் படத்தொடக்க விழாவிலேயே “யார் இவர்?” என திரும்பிப் பார்த்தேன்.

அன்று விழாவுக்கு ஓவரான மேக்கப்புடன், அரைகுறை ஆடையுடன் அவிச்ச இரால் போல வந்திருந்தார். “இவளை எதுக்கு இப்ப புக் செய்தாங்கள்?” எண்டு நினைச்சன். 

விஜய் கூட அன்று மேடைல சொன்னார் “இவங்களை சின்ன வயசு குஸ்புவை” பார்த்து போல இருக்காம்.

வேலாயுதம் படம் தொடங்கப்பட்ட போது இவருக்கு எத்தனை விசிறிகள் இருந்தார்கள் என்பதும் வேலாயுதம் வெளியாகும் போது எத்தனை விசிறிகள் இருக்கிறார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. இந்த ஒரு வருடத்தில் இரண்டு சுமாரான (அல்லது தோல்வி) படங்களில் நடித்திருந்த இவருக்கு அதிகளவான ரசிகர்கள் சேர்ந்தது ஆச்சரியமே!

ஹீரோயிசம் கூடிய வேலாயுதம் படத்தில் இவருக்கு நிறைய காட்சிகள் தரப்பட்டுள்ளது. படம் பார்த்த பதிவர்கள் எழுதிய விமர்சனங்களில் இருந்து ஹன்ஸிகா பற்றிய பாகத்தை மட்டும் பிரித்துள்ளேன். 

ஒவ்வொருவரும் என்ன சொல்றாங்க எண்டு பார்ப்பமா? ஏன்னா அவங்களைப் பத்தி எவ்வளவு சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

C.B.Senthilkumar
யூத் குஸ்பூ போல் வரும் ஹன்ஸிகா கொடுத்த வேலையை சிறப்பாக நிறைவேற்றி பாடல் காட்சிகளில் திறமையை, இளமையைக் காட்டுகிறார்.

Kss.Rajh
நடிக்க முயற்சி செய்திருக்கிறார்… பாடல் காட்சிகளில் விஜயுடன் ஆடும் போது..இவர் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம். ஏன் என்றால் சிறப்பான ஒரு டான்சரான விஜய்க்கு ஓரளவு இவர் ஈடுகொடுத்து ஆட முயற்சி செய்திருக்கலாம்… படத்தில் ஹன்சிகாவுக்கு கிராமத்துப் பெண் வேடம். ஆனால் கொஞ்சம் கூட அதுக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறார்… இவரது அதிக படியான உடம்பு.. இவரை படத்தில் ரசிக்க முடியவில்லை. இவர் உடம்பைக் குறைத்து நடனம், நடிப்பு போன்றவற்றில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இல்லை தமிழ் சினிமாவில் இருந்து விரைவில் காணாமல் போய்விடுவார். 

Cable sankar
ஹன்சிகா மோத்வானி சரியான மொத்துவானி. ரியாக்‌ஷனுங்கிறது ஸ்பெல்லிங் என்னன்னு கேட்பாங்க போலருக்கு? லவ் பண்ணவும் வர்மாட்டேன்குது. அழுகவும் வர மாட்டேன்குது. 

Kana Varo
இளகிய மனம் படைத்த எந்த இளைஞனும் படத்தைப் பார்க்க வேண்டாம். மூன்று நாள் தூக்கம் இல்லாமல் தவிப்பீங்க. அவ்வளவு காட்டுறார் (நடிப்பை). முகத்தில் கொஞ்சம் முற்றல் தெரிந்தாலும் கொள்ளை அழகு. அழகான பல் வரிசை. எடுப்பான தேகம். “சதைப்பிடிப்பான இடுப்பு” (மன்னிச்சிடுங்க), சிம்ரனுக்கு அப்புறமா அதிக சீன்களில் இடுப்பைக் காட்டி நடிக்கிறார். கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணியுடனேயே அலைகிறாரே கொஞ்சமாவது எங்களுக்காக இரங்க கூடாதா என ஏங்கும் என் போன்றவர்களுக்காக கடைசி நேரத்தில் “மொடேன் ட்ரெஸ்ஸில்” வந்து அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றார். எல்லாம் ஓ.கே பட் நடிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. அவ என்ன வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்றா?

“சில்லாக்ஸ்…” பாடலில் அவ்வளவு நெருக்கம் - கிறக்கம். சங்கீதா மெடம், விஜயை கண்டிச்சு வையுங்க. இப்பிடியா ஒரு மனுசன் பூந்து விளையாடுறது கிரவுண்டில?

A.R.V.Loshan
ஹன்சிகா - கிராமத்தில் வாழும் அத்தை மகள்? நம்புங்கப்பா..வெள்ளையாய் புசுபுசுவென்று இருந்தால் எல்லாருக்கும் பிடித்துவிடுமா? ஒரு சில காட்சிகள் தவிர மற்றக் காட்சிகளில் பார்த்தாலே உவ்வேக்.. சில்லாக்ஸ் பாடலில் பல இடங்களில் அசைவுகளில் குஷ்புவை ஞாபகப்படுத்துகிறார்.(அந்தக் காலமா இந்தக் காலமா என்பது அவரவர் ரசனையில்)


Mynthan Siva 
ஜெனீலியாவை கண்டு பொறாமைப்பட்டு மந்திரித்த முட்டை வைக்கும் ஹன்சிகா வழமை போல கோதுமை குழையல் தான்!!அடிக்கடி ஹன்சிகாவின் இடுப்பும் தொப்புளும் தான் திரையை வியாபித்திருந்தது!!இன்னமும் வெளியில் வரவே இல்லை!!:)

Yuvakrishna
ஹன்சிகாவுக்கு கேரக்டர்தான் சப்பை. ஆளு கொழுக் மொழுக்கென்று வாட்டர்பெட் மாதிரி கிக்காக இருக்கிறார். விஜய்க்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, ரேப் செய்ய நினைக்கும் காட்சியில் அவரது தொப்புள் சிறப்பாக நடித்திருக்கிறது. அது இயற்கையான தொப்புள் தானா அல்லது ஸ்பெஷலாக லண்டனில் ஆர்டர் செய்து செய்த மெழுகுத் தொப்புளா என்கிற சந்தேகம் வருகிறது. மற்றபடி ஹன்சிகாவின் ஹேர்ஸ்டைல் சூப்பர். உதடுகள் சூப்பரோ சூப்பர். நடிப்புதான் கொடுமை. வேறென்ன சொல்ல?

Senkovi
தங்கத் தலைவி-
பெரிய பேரிக்கா-
கொழு கொழு கொய்யாக்கா-
பாதி உரிச்ச ஆரஞ்சு -
குத்தாத பலாக்கா - நம்
உலக உருண்டை 

ஹன்சிகா அவர்கள். 
தலைவி நடிப்பைத் தவிர எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார். அந்த கிராமப் பெண் கேரக்டருக்கும் அவர் சுத்தமாகப் பொருந்தவில்லை என்பதையும் நாம் வருத்தத்தோடு ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். சிவபெருமான் (அல்லது சிவாஜி?) போல் ’நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்று தலைவியும் பாடலாம். ஒரு அசைவு அசைந்தார் என்றால், இடுப்புச் சதை இரண்டு நிமிசத்திற்கு ஆடுகிறது.(அதோட அதிர்வெண் என்னவா இருக்கும்...) அது ஒரு பக்கம் போகுது, இது ஒரு பக்கம் போகுது..நமக்கு இருப்பதோ இரண்டு கண்கள்..என்ன செய்வேன்..என்ன செய்வேன்..

பி.கு : வேலாயுதம் படத்தில் தோன்றியதை விட தற்போது ஹன்ஸிகா மெலிந்து விட்டார் என்ற தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம். பார்க்க..



No comments:

Post a Comment