Thursday, December 22, 2011

கேரள அரசைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கன்னியாகுமரியில் ஜவாஹிருல்லா


மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ முனைவர் ஜவாஹிருல்லா கன்னியாகுமரியில் அளித்த பேட்டி: 
 
சிவகிரியில் உருவாகும் முல்லைப்பெரியாறு அரபிக்கடலில் வீணாகக் கலப்பதை தடுக்கவும், தமிழகத்தில் வறட்சியான பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவும் இந்த அணை உருவாக்கப்பட்டது. 

அணை உருவாக்கும் போது தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப் பட்டது. 

ஆனால் தற்போது கேரள அரசு அணை பழைமையானதாகிவிட்டது என்று சொல்லிக்கொண்டு புதிய அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் கேரளா மற்றும் தமிழக மக்களிடம் ஒரு பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையை மதிக்காமல் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் கேரள அரசை இந்திய அரசியலமைப்பின் 355 ஆவது பிரிவை பயன்படுத்தி கேரள அரசைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment