மன்னிக்கும் குணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை சார்பில் மன்னிப்பு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர் மற்றும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளிடம் என மொத்தம் 140 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
ஒருவர் தவறு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல் மன்னிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் தவறு செய்தவர்களை மன்னிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
மற்றவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் மனப்பான்மை தான் மன்னிக்கும் குணத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. அந்த வகையில் பெண்கள், ஆண்களை விட மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆய்வாளரும், யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை பேராசிரியருமான கார்மென் மகந்தோ கூறியுள்ளார். மன்னிப்பது பற்றி பெற்றோரும், பிள்ளைகளும் தெரிவித்துள்ள விளக்கங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
|
No comments:
Post a Comment