Wednesday, November 23, 2011

'கொலவெறி' பாடலுக்கு அமிதாப் வாழ்த்து!


தனுஷ் எழுதி பாடியுள்ள ' WHY THIS KOLAVERI DI ' பாடல் தற்போது தமிழக இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது வலைதளங்கள் மூலம் மிகப் பிரபலமாக உள்ளது.


'WHY THIS KOLAVERI DI ' பாடல் டிவிட்டர் இணையத்தின் TRENDINGல் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.
YOUTUBE இணையத்தின் TRENDING-லும் இப்பாடல் தற்போது முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதுவரை YOUTUBEல் 17,90,827 பார்த்து இருக்கிறார்கள். ஒரு தமிழ் பாடலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், இந்தி சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் ' KOLAVERI BECOMES A VIRAL IN INDIA ' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 

இந்தி எஃப்.எம் களும் தற்போது இந்த பாடலை ஒளிபரப்பி வருகிறார்கள். இது வரை எந்த ஒரு பாடலும் செய்யாத சாதனையை இந்த பாடல் அடங்கிய YOUTUBE வீடியோ செய்துள்ளது. 

YOUTUBEல் "POPULAR VIDEOS AROUND THE WEB" ல் ஒரு தமிழ் பாடல் முதன் முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த ஒரு பாடல் ஒவ்வொரு சாதனை செய்து புகழ்ச்சியில் வளர்ந்து வருவதால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி வருகிறது 3 படக்குழு. 

இப்பாடலை கேட்ட இந்தி முன்னணி நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் " கொலவெறி பாடலை பற்றிய பேச்சாக இருந்ததால் அப்பாடலை கேட்டேன். அருமையாக இருந்தது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷிற்கு எனது வாழ்த்துக்கள் " என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி நடிகராக இருக்கும் அமிதாப்பச்சனின் இந்த வாழ்த்து செய்திக்கு படக்குழு தனது நன்றியை தெரிவித்டுள்ளது. இப்படத்தின் அறிமுக இசையமப்பாளர் அனிருத்தை தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய பல இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.

No comments:

Post a Comment