அவர்கள் காதலித்தார்கள்.தீவிரமான காதல்.இருவரும் ஒரே இட்த்தில் பணிபுரிந்தார்கள்.ஒரு நாள் மூன்றுநாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு அவன் ஊருக்கு கிளம்பிப் போனான்.
அன்று மாலை வழக்கம்போல அவள் போன் செய்தாள்.அவனுடைய செல்போன் அணைக்கப்பட்டிருந்த்து.மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தாள்.அவனும் தொடர்பு கொள்ளவில்லை.
இரண்டுநாள் கழித்து அவன் போன் செய்தபோது இவள் பேசவில்லை.வேண்டுமென்றே தவிர்த்து விட்டாள்.நேரில்போய் சமாதானம் செய்துகொள்ளலாம் என்று அவன் நினைத்தான்.
வேலைக்கு திரும்பி வந்து அவள் வருகைக்காக காத்திருந்தான்.அதே அலுவலகத்தில் வேலை செய்யும் இன்னொருவனுடன் பைக்கில் வந்து இறங்கினாள்.இவனுடன் பேசுவதை தவிர்த்தாள்.
தனது செல்போன் பழுதடைந்து விட்ட்தாகவும்,உறவினர் ஒருவர் மரணமடைந்து விட்ட்தாகவும் அதனால் பேசமுடியாமல் போய்விட்ட்தென்ற விளக்கத்துடன் கடிதம் எழுதி கூடவே ஒரு வரி சேர்த்தான் “அவன் நல்லவன் இல்லை”
அவளுக்கு தாங்க முடியாத சந்தோஷத்தை அந்த கடைசி வரி தந்த்து.அவள் எதிர்பார்த்த்து இதுதான்.எங்கே தன்னுடைய காதலி தன்னை விட்டு போய்விடுவாளோ என்ற கலக்கத்தை அவனிடம் ஏற்படுத்தியாகிவிட்ட்து.இனி அவன் சொல்படி கேட்பான்.
தன் காதலை நிரூபிக்க,தன்னை வலிமையானவனாக காட்டிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வான்.”அவன் நல்லவன் இல்லை”என்றது பொய்யானதே!கலக்கத்தில் அடுத்தவன் இமேஜை கொல்வது தன்னை மற்றவனை விட உயர்வாக காட்டிக் கொள்ளவே!
இனி அவனுடன் எப்போது பேசினாலும் கலக்கமடைவான்.பொய்யான பிம்பத்தை உருவாக்குவான்.இதெல்லாம் அவர்கள் ஒருவேளை திருமணம் செய்துகொண்டால் பிரச்சனையும் ஆகலாம்.
இத்தகைய சூழ்நிலைகளில் ஒரு ஆண்,அடுத்தவனது இமேஜை கொல்கிறான் பலிக்காதபோது அவனை கொலை செய்கிறான்.அதுவும் முடியாதபோது தன்னை மாய்த்துக் கொள்கிறான்.பேச்செல்லாம் அந்தந்த சந்தர்ப்பத்துக்காகவே!உண்மை உள்ளே இருக்கிறது.
பத்திரிகை செய்தி ஒன்று.
கணவன்,மனைவிக்குள் எப்போதும் சண்டை.வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.இனி தாங்க முடியாது என்று மனைவிக்கு தோன்றவே சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்.சில மாதங்கள் கழித்து கணவன் மனைவியைத் தேடி வந்த போது அவள் வேறொருவனுடன் குடும்பம் நட்த்திக் கொண்டிருந்தாள்.ஒரு வழியாக பேசிப் பார்த்து மூன்று பேரும் குடும்பம் நட்த்துவதென முடிவானது.மூவரும் ஒரே படுக்கையில்! சில நாட்களில் அப்பெண்ணின் கணவன் அவளது காதலனை கொன்று விட்டான்.வாக்குமூலத்தில் அவன் தெரிவித்த்து.’’மூவரும் ஒரேபடுக்கையில் படுத்திருக்கும்போது அவன் பக்கமே திரும்பி திரும்பி படுத்தாள்,என்னால் தாங்க முடியவில்லை,கொன்று விட்டேன்”
|
No comments:
Post a Comment