Wednesday, November 23, 2011

பேஸ்புக் பயனாளர்களை தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி தகவல்!

குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது

 ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யாரோ சில விஷமிகள் இந்த வலைதளத்திற்குள் நுழைந்து 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் கணக்குகளில் புகுந்து பாலியல் மற்றும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை இணைத்துள்ளனர். பெங்களூர் நகரத்தில் மட்டும்2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ் புக் பயனீட்டாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.


பெங்களூரில் சைபர் க்ரைம் துறைக்கு இதுக்குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. சில புகார்கள் தொடர்பாக இத்துறை விசாரணையை துவக்கியுள்ளது. நேற்று காலை பெங்களூர் கோரமங்கலா பகுதியை சார்ந்த காமினி வர்மா என்பவர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது ஃபேஸ் புக் கணக்கை லாக் செய்துள்ளார். அவருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய ஃபோட்டோவில் உள்ள முகத்தை மார்ஃபிங் முறையில் நிர்வாண நடிகையின் உடலில் ஒட்டிய புகைப்படம் காமினியின் ஸ்டேடஸ் செய்தியில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது தாயார், சகோதரர் மற்றும் 19 நண்பர்கள் காமினியை திட்டி மெஸேஜ் அனுப்பியுள்ளனர்.

இதனை கண்ணுற்று அதிர்ச்சியடைந்த அவர் நேரடியாக போலீஸுக்கு ஃபோன் செய்துள்ளார். அவர்கள் சைபர் க்ரைமில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். முந்தைய தினம் காமினியின் ஃபேஸ் புக் அக்கவுண்டின் அவரது நண்பரிடமிருந்து செய்தி அறிக்கை வந்துள்ளது. இது ஒரு பிரபல பத்திரிகையில் வெளியான செய்தி என குறிப்பிடப்பட்டிருந்தது. ’party till the wee hours’ என்ற செய்தி தலைப்பை படித்துவிட்டு அவர் அந்த ஆர்வத்துடன் அந்த லிங்கை க்ளிக் செய்துள்ளார். மறுநாள் அவருடைய கணக்கில் எல்லாமே மாற்றப்பட்டுள்ளது.

முன்பு ஓர்குட் என்ற வலைதளமும் இவ்வாறுதான் வீழ்ச்சியை சந்தித்தது. ஃபேஸ்புக்கு அதே போன்ற தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஃபேஸ்புக் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் அதற்கும் ஓர்குட்டின் கதிதான் ஏற்படும் என பிரபல மீடியா நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். ஆகவே தேவையற்ற லிங்குகள் உங்கள் ஃபேஸ்புக்கில் தென்பட்டாலோ அல்லது பாலியல் தொடர்பான ஸ்பேம் செய்திகள் உங்கள் வாலில்(wall) கண்டால் அதனை ஆர்வக் கோளாரில் க்ளிக் செய்துவிடாதீர்கள்.

No comments:

Post a Comment