நட்ட நடு ஆத்துல சட்டையெல்லாம் ஈரமாக்கி நிற்க வைப்பார்கள் ஹீரோவையும் ஹீரோயினையும். பாடல் காட்சிகளில் இப்படி நிற்கும் ஜோடிகளுக்கு
நீச்சல் தெரியுமா என்று டான்ஸ் மாஸ்டர்களும் கேட்பதில்லை. வெட்கப்பட்டுக் கொண்டு ஹீரோக்களும் சொல்வதில்லை. தண்ணீரில் தவறி விழுந்து, நாக்கு மூக்கெல்லாம் புரையேறி பியூஸ் ஆன ஏராளமான ஹீரோக்களை எனக்கு தெரியும் என்று சிரித்தார் அந்த பெயர் சொல்ல விரும்பாத டான்ஸ் மாஸ்டர்.
இவர்களை போன்ற மாஸ்டர்களின் மைண்ட் வாய்ஸ் இனி எடுபடாது. நடிகைகளில் பலர் நீச்சல் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். த்ரிஷா, அனுஷ்காவை தொடர்ந்து தீக்ஷா சேத்துக்கும் அப்படி ஒரு தண்ணீர் வரலாறு இருக்கிறது. தீக்ஷா சேத்தோடு கடலில் குளித்தாலும் கவலைப்படாமல் உருண்டு புரளலாம் நீச்சல் தெரியாத மேற்படி ஹீரோக்கள். ஏனென்றால், நீச்சல் போட்டியில் மாநில அளவில் சேம்பியனாம் இந்த ராஜபாட்டை அழகி.
சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்திலும் நடித்து வருகிறார் தீக்ஷா சேத். 2009 ல் மிஸ் இந்தியா போட்டியில் இறுதிவரை முன்னேறிய தீக்ஷாவுக்கு ஒரு விஷயம்தான் இன்னும் அலுப்பாக இருக்கிறதாம். ஹீரோயின்கள் என்றாலே அவர்கள் டூயட்டுக்குதான் லாயக்கு என்று நினைத்துவிடுகிறார்கள். எங்களுக்கும் பைட் சீன்ல வில்லன்களை புரட்டி எடுக்கிற மாதிரி சான்ஸ் கொடுக்கலாம்ல என்றார். அடி வாங்குறதுக்காகவே ஒரு ‘அடிதடி’ நடக்குமே!
|
No comments:
Post a Comment