தனுஷ் எழுதி பாடியுள்ள ' WHY THIS KOLAVERI DI ' பாடல் தற்போது தமிழக இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது வலைதளங்கள் மூலம் மிகப் பிரபலமாக உள்ளது.
இதுவரை YOUTUBEல் 39,00,000 மேற்பட்டோர் பார்த்து இருக்கிறார்கள். ஒரு தமிழ் பாடலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், இந்தி திரையுலக பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் என அனைவருமே ' 3 ' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்தி சேனல்கள் மற்றும் ஆங்கில இதழ்கள் என பல ஊடகங்களும் 'KOLAVERI BECOMES A VIRAL IN INDIA' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
அமிதாப் பச்சன் : 'கொலவெறி' பாடலை பற்றியே எங்கும் பேச்சாக இருந்ததால் அப்பாடலை கேட்டேன். அருமையாக இருந்தது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷிற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் "This Kolaveri is veri veri endearing .. just not leaving the sound waves in the mind-u .. what-a what-a what-a do-u ... !! ha ha !! " என்று தெரிவித்துள்ளார்.
முன்னணி இயக்குனர் கரண் ஜோஹர் : கொலவெறி டி! கண்டிப்பாக இந்த வருடத்தில் இந்திய அளவில் பிரபலமான பாடல் இதுதான்.! ராக் ஆன் தனுஷ்! என்று வாழ்த்தியுள்ளார்.
முன்னணி இசையமைப்பாளர் இஷான் : கொலவெறி ராக்ஸ்! என்று பாராட்டியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா : கொலவெறி கண்டிப்பாக கேளுங்கள்... எப்போதுமே தென்னந்தியா வித்தியாசமானது தான் என்று சொல்லியிருக்கிறார்.
சல்மான் ருஷ்டி : "India obsessed by a slapped politician & the most ridiculously catchy song since Macarena.Must be a slow news moment. #Kolaveri #SharadPawar"
சோனாக்ஷி சின்கா : "was wondering wht #kolaveri was, so googled it. its my lovely Aishwarya di's @ash_r_danush song from 3! LOVE IT! ok mama, tune change-a ;)"
|
No comments:
Post a Comment