இந்தியாவில் பருத்திச் செய்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றது. குடும்பத்தைப் பராமரிக்கின்றமைக்காக நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த மில்லியன் கணக்கான சிறுவர்கள் இத்தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இந்திய ரூபாய் 100 வரைதான் சம்பளமாக கொடுக்கப்படுகின்றது. ஆனால் இவர்கள் குழந்தைப் பருவத்தை இங்கு தொலைத்து விடுகின்றனர். பாடசாலைக் கல்வியை இழந்து விடுகின்றனர்.
எஜமானர்களால் உடல், உள ரீதியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். குழந்தை அடிமைகள் மீது குஜாராத் மாநிலத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள் இரகசிய கமரா ஒன்றின் மூலம் அண்மைய நாட்களில் ஆதாரங்களுடன் வெளியாகி உள்ளது.
|
No comments:
Post a Comment