டெல்லி திலக் நகர் பகுதியில் குடிபோதையில் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
ஆகஸ்ட் 31ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட் சிறுமி போலீஸாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அந்த கொடுமைக்கார தந்தையைக் கைது செய்தனர்.
சம்பவத்தன்று அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவருடைய தந்தை குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். மகளிடம் தவறாக நடந்து கொண்டார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
No comments:
Post a Comment