நிர்வாண புகைப்படம் எடுப்பதில் பிரபலமான ஸ்பென்சர் ட்யூனிக் என்ற புகைப்படக் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேலின் சாக்கடலில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டுத் துணியில்லாமல் கடலில் இறங்கி போஸ் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இவர்கள் அத்தனை பேரும் இஸ்ரேலியர்கள் ஆவர்.
இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் 18 வயது முதல் 77 வயது வரையிலான ஆண், பெண்கள் கலந்து கொண்டு ட்யூனிக்குக்கு போஸ் கொடுத்தனர். நீரில் மிதந்தபடியும், நீருக்குள் நின்றபடி கைகளை மேலே உயர்த்தியபடியும், விதம் விதமாக இவர்கள் போஸ் கொடுத்தனர்.
ட்யூனிக் வேண்டுகோளை ஏற்று இவர்கள் அதிகாலை 1 மணிக்கே கடலுக்கு அருகே வந்து கூடி விட்டனர். பின்னர் உடைகளைக் களைந்த அவர்கள் கடலில் இறங்கி போஸ் கொடுக்கத் தயாரானார்கள். ட்யூனிக் சூரிய உதயம் ஆரம்பமானவுடன் கடலில் இறங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதனால் அனைவரும் சூரியனின் வருகைக்காக காத்திருந்தனர். சூரிய உதயம் தொடங்கியதும் அத்தனை பேரையும் கடலில் இறங்கி மிதக்குமாறு கூறினார் ட்யூனிக். அதன்படி அனைவரும் கடலில் மிதந்தனர். அதை புகைப்படம் எடுத்துத் தள்ளினார் ட்யூனிக்.
|
No comments:
Post a Comment