சாதனைகள் தான் எத்தனை வகைகள். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை, வித்தியாசமான முயற்சி என தொடருகின்றது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் குயின்லாந்தில் பிகினி உடையில் தோற்றிய பெண்கள், ஆண்களை கிறங்கடித்துள்ளனர். 357 பெண்கள் கெவில் அவென்யூ இருந்து சர்ஃபர்ஸ் பாரடைஸ் உள்ள கடற்கரை வரை பிகினி உடையில் அணி வகுப்பாக சென்று உலக சாதனை படைந்துள்ளனர். கோல்ட் கோஸ்ட் புல்லட்டின் எனும் செய்தி ஊடகத்தினால் இன் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கு பற்றியவர்களுக்கு தலா 24 அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது ஓர் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படவுள்ளதாக AFP செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது. இவ் விநோத சாதனை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது
|
No comments:
Post a Comment