பெங்களூரில் 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஊடுருவி, செக்ஸ் படங்கள், வீடியோவை உலவ விட்டுள்ளனர் விஷமிகள். சமூக இணையதளமான பேஸ்புக் இளைஞர்களிடையே ம¤கவும் பிரபலம்.
இன்டர்நெட் வசதி இருக்கும் பெரும்பாலானோர் பேஸ்புக் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். போட்டோ, தகவல்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
பெங்களூர்வாசிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தை திறந்ததும் அதிர்ந்து போனார்கள். அத்தனை பேரின் பக்கங்களிலும் செக்ஸ் படங்கள் இருந்தன. செக்ஸ் வீடியோக்களும் இருந்தன. இதைப் பார்த்தும் உடனே கம்ப்யூட்டரையே பலர் ஆப் செய்து விட்டனர். பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் செக்ஸ் படங்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் போன் செய்து விசாரித்தனர். ஏறக்குறைய 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்களில் இதுபோல் செக்ஸ் படங்கள் ஊடுருவி இருந்தன. கடுப்பாகிப் போன பலர் தங்கள் பேஸ்புக் அக்கவுன்டுகளை குளோஸ் செய்து விட்டனர்.
பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், வைரஸ், ஆபாச படங்கள் அடங்கிய சாப்ட்வேரை டவுண்லோடு செய்யுமாறு வந்த லிங்க்கை கிளிக் செய்ததால், அதன் மூலம் ஆபாச படங்கள் பேஸ்புக் உறுப்பினர்களின் பதிவுகளில் ஊடுருவியதாகத் தெரிய வந்துள்ளது. ஆபாச படத்தை ஊடுருவ விட்டவர்களை நெருங்கி விட்டோம். கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருகிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
|
No comments:
Post a Comment